தென்னிந்திய திரை உலகின் சிறந்த நடிகையாகவும் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை அமலா பால் அடுத்ததாக மலையாளத்தில் ப்ரித்வி ராஜுடன் இணைந்து ஆடுஜீவிதம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஆடுஜீவிதம் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

முன்னதாக இயக்குனர் அனூப்.S.பணிக்கர் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் கடாவர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகவுள்ளது. இதனிடையே மற்றுமொரு திரில்லர் படமாக அமலாபால் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் அதோ அந்த பறவை போல.

இயக்குனர் K.R.வினோத் இயக்கத்தில் அமலா பால் கதாநாயகியாக நடித்திருக்கும் அதோ அந்த பறவை போல திரைப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கொச்சார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாந்தகுமார்.C ஒளிப்பதிவு செய்துள்ள, அதோ அந்த பறவை போல படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார்.

வி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட், சாயா புத்ரா புரோடக்சன்ஸ், செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இணைந்து வழங்கும் அதோ அந்த பறவை போல திரைப்படத்திற்கு ஜான் ஆபிரஹாம் படத்தொகுப்பு செய்ய, சுப்ரீம் சுந்தர் இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அதோ அந்த பறவை போல திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 26-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Action thriller on AUG 26#AdhoAndhaParavaiPola gets a release date #AAPPFromAug26@Amala_ams @AshishVid @viswavsquare #VinothKR
@arun_rajn @santhadop @JxBe @VSquareEnt pic.twitter.com/aWoiUg8vFL

— VSquare Entertainment (@VSquareEnt) August 7, 2022