தமிழ் திரை உலகில் நடிகராக களம் இறங்கி இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்து தற்போது உலக சினிமாவின் முக்கிய நடிகராக உருவெடுத்துள்ள நடிகர் தனுஷ் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் நடித்த தி க்ரே மேன் திரைப்படம்  சில தினங்களுக்கு முன்பு ரிலீஸாகி உலகெங்கும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

தி க்ரே மேன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. இப்படத்திலும் நடிகர் தனுஷ் மிக முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தயாராகும் வாத்தி படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

முன்னதாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் அட்டகாசமான ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…