இந்திய திரை உலகின் ஈடு இணையற்ற நடிகராகவும் உலகெங்கும் பல கோடி சினிமா ரசிகர்களின் அபிமானம் பெற்ற ஃபேவரட் ஹீரோவாகவும் எப்போதும் உச்ச நட்சத்திரமாகவும் ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் கொண்டாடினர்.

இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் #தலைவர்169 திரைப்படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் இத்திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு மிரட்டலான டைட்டில் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. விரைவில் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கான முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ஜெயிலர் திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற ரஜினிகாந்த் இன்று ஆகஸ்ட் 7-ஆம் தேதி மதியம் சென்னை திரும்பினார். அப்போது பத்திரிக்கையாளர்கள் சூப்பர் ஸ்டாரிடம் "அடுத்த ப்ராசஸ் என்ன சார்..?" என கேட்க அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கே உரித்தான ஸ்டைலான சிரிப்போடு "ஷூட்டிங் தான்" என பதிலளித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

#Jailer 🌟

Press : Next Process enna sir..??

Thalaivar : Shooting dhan..(with his trademark laugh)❣️#SuperstarRajinikanth #Rajinikanth@Nelsondilpkumarpic.twitter.com/T792nM10tp

— Laxmi Kanth (@iammoviebuff007) August 7, 2022