இந்திய திரையுலகில் தனக்கென தனி பாணியில் பிரம்மாண்டமான திரைப்படங்களை கொடுத்துவரும் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன், தற்போது இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழும் இயக்குனர் ஷங்கர் இயக்குனராக அறிமுகமான ஜென்டில்மேன் திரைப்படத்தை தயாரித்தார். தொடர்ந்து K.T.குஞ்சுமோன் தயாரிப்பில், தனது 2வது படமாக பிரபுதேவா நடித்த காதலன் திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கினார். 

ஜென்டில்மேன் & காதலன் என இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டாக, இந்த இரு திரைப்படங்களுக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் இன்று வரை அனைவரது ஃபேவரட் பாடல்களாக ஒலிக்கிறது. தொடர்ந்து குறிப்பிடப்படும் திரைப்படங்களை தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் தயாரித்துள்ளார்.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆஹா கல்யாணம் படத்தை இயக்கிய A.கோகுல் கிருஷ்ணா இயக்கவுள்ள ஜென்டில்மேன் 2 படத்திற்கு பாகுபலி, RRR படங்களின் இசையமைப்பாளர் M.M.கீரவாணி இசையமைக்கவுள்ளார். 

பிரபல மலையாள நடிகைகளான நயன்தாரா சக்கரவர்த்தி மற்றும் பிரியா லால் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்நிலையில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளர் அஜயன் வின்சென்ட் ஜென்டில்மேன் 2 படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Proud to announce #AjayanVincent will be the Cinematographer for #GentlemanFilmInternational's
Mega project #Gentleman2, @ajayanvincent@agoks @mmkeeravaani @NayantharaaC @PriyaaLal @johnsoncinepro @ajay_64403 @UrsVamsiShekar @PRO_SVenkatesh @Fridaymedia2 pic.twitter.com/6HELVESrPk

— K.T.Kunjumon (@KT_Kunjumon) June 17, 2022