“நீங்கள் டைவர்ஸ் ஆன பெண்ணா?” விவாகரத்து ஆன பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய Play god!

“நீங்கள் டைவர்ஸ் ஆன பெண்ணா?” விவாகரத்து ஆன பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய Play god! - Daily news

விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து, அவர்களது வாழ்க்கையில் விளையாடி வந்த ப்ளே பாயை போலீசார் அதிரடியாக தட்டி தூக்கி உள்ளனர்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, சென்னையைச் சேர்ந்த அமுதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்ற இளம் பெண், இரு வீட்டர் முறைப்படி திருமணம் ஆன நிலையில், கணவருடன் வசித்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு, கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்தார்.

இதனையடுத்து, அந்த பெண் விக்ரம் வேதகிரி என்பவரை காதலித்து வந்த நிலையில், இதற்கு அந்த இளைஞனின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதனையடுத்து, சில மாதங்கள் இருவரும் நெருங்கிப் பழகி காதலித்த நிலையில், அந்த இளைஞன் அவரது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, அந்த பெண்ணை ரகசியமாக திருமணமும் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த ரகசிய திருமணத்திற்குப் பிறகு, அந்த பெண்ணை தொடர்ச்சியாக பல முறை பாலியல் உறவு கொண்டு, கணவன் - மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள்.

இப்படியாக, தொடர்ச்சியாக அவர்கள் இருவரும் தனிக்குடித்தனம் நடத்திய உல்லாசமாக வாழ்ந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அந்த பாலியல் இச்சைகள் எல்லாம் தீர்ந்த பிறகு, அந்த பெண் மீது அந்த இளைஞன், பல வழிகளில் தொடர்ந்து கொடுமைகளை புரிந்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன், அந்த ரகிசய கணவனின் கொடுமைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அந்த பெண்ணை அவர் ஒரு கட்டத்தில் தாக்கவும் செய்திருக்கிறார்.

இப்படியாக, தொடர்ச்சியாக அந்த பெண்ணை தாக்கி கொடுமைப் படுத்தி வந்த அந்த இளைஞன், ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை விட்டு தலைமறைவாகி உள்ளார்.

அதே நேரத்தில், இவர்களுடனான சண்டையின் போது கீழே போட்டு உடைத்த அவரது செல்போனையும், அவர் அங்கேயே விட்டு விட்டு சென்றிருக்கிறார்.

இதனால், 2 வது காதல் கணவன் தலைமறைவானதும், சந்தேகம் அடைந்த அந்த பெண், உடைந்த அந்த செல்போனை சரி செய்து பார்த்து உள்ளார். அப்போது, அந்த செல்போனில் பல பெண்களின் ஆபாசப் படங்களும் இருந்துள்ளதைக் கண்டு, கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

குறிப்பாக, தன்னைப் போலவே பல பெண்களை காதலித்து ஏமாற்றி பாலியல் உறவு கொண்டதும், தற்போது மீண்டும் வேறொரு பெண்ணை வரும் 16 ஆம் தேதி திருமணம் செய்ய இருப்பதும் தெரிந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார்.

இது குறித்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாக போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அந்த விக்ரமை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

தற்போது, கைது செய்யப்பட்ட விக்ரமிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment