தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் அனிருத்.தனது சூப்பர்ஹிட் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து , ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் அனிருத்.

கடந்த சில வருடங்களாக பெரிய ஹீரோக்களின் படங்கள் அனிருத் இசை இல்லாமல் வெளிவருவதில்லை , பல படங்களுக்கு பக்கபலமாக அனிருத் இருந்துள்ளார்.அதுமட்டுமல்லால் இப்போது பெரிய படங்களின் டைட்டிலுக்கும் இவருக்கும் ஒரு சுவாரசிய சம்பந்தம் இருப்பது தெரியவந்துள்ளது.

இவர் வேலை செய்த ஹீரோக்களின் அடுத்த பட டைட்டில்கள் இவரது பாடல்களில் இருந்து இருப்பது போல அமைந்துள்ளது.இந்த ஒற்றுமை சமீபத்தில் வெளியான சில படங்கள் மற்றும் அடுத்து வெளிவர இருக்கும் படம் போன்றவற்றில் ஒத்துப்போகிறது என்பது ஆச்சரியமான தகவல்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் இடம்பெற்ற சும்மா கிழி பாடலில் அண்ணாத்த என்ற வார்த்தை இடம்பெறும் இது இவர் நடித்த அடுத்த படத்தின் டைட்டில் ஆனது குறிப்பிடத்தக்கது.இதே போல தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வாத்தி ரெய்டு பாடலில் பீஸ்ட் என்ற வார்த்தை இடம்பெறும் இது விஜயின் அடுத்த பட டைட்டில் ஆக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இவற்றை தொடர்ந்து சில நாட்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பெயர் ப்ரின்ஸ் என அறிவிக்கப்பட்டது.இந்த வார்த்தை டான் படத்தில் வரும் பிரைவேட் பார்ட்டி பாடலில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.அனிருத் எதோ ஒரு வகையில் இவர்களது அடுத்த பட டைட்டில்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார் என்பது இதன் மூலம் தெரிகிறது.