தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ரங்கா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. முன்னதாக இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள வட்டம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இதனிடையே இயக்குனர் N.கிஷோர் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள மாயோன் திரைப்படம் வருகிற ஜூன் 24-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. ஆக்ஷன் ஃபேன்டசி த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ள மாயோன் திரைப்படத்தை தனது டபுள் மீனிங் புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். 

தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதியுள்ள மாயோன் படத்தில் சிபி சத்யராஜ் உடன் இணைந்து தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, ஹரிஷ் பெரடி ஆகியோர் மாயோன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ள மாயோன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 

சமீபத்தில் வெளியான மாயோன் திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மாயோன் திரைப்படத்தில் இருந்து இசைஞானி இளையராஜாவின் இசையில் தேடி தேடி எனும் பாடல் வெளியாகியுள்ளது. அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.