சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கிரண். தொடர்ந்து தல அஜித், உலகநாயகன் கமல், டாப் ஸ்டார் பிரசாந்த் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு டாப் நடிகையானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார் கிரண். 

ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக இருந்த கிரண், தற்போது எடை கூடிய லுக்கில் உள்ளார். இதனால், அத்தை, அம்மா, அண்ணி, அக்கா கேரக்டரில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் முத்தினக் கத்தரிக்காய் படம் வெளியானது. இந்தப் படத்தில் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி-க்கு அத்தையாக நடித்திருந்தார் கிரண்.

2017-ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் அதிகம் தலைகாட்டாத கிரண் சந்தானத்துடன் சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த போது எடுத்த பேட்டோவை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் கிரண். அதில் கரெக்ட்டான வெயிட்டுடன் நச்சென இருக்கிறார்.

மேலும் அந்த போட்டோ குறித்து விளக்கியுள்ள கிரண், ஆரம்ப காலத்தில் உடல் எடையைக் குறைக்க மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் 20 கிலோவை 2 மாதத்தில் குறைத்தேன். இப்போது 2 கிலோவை குறைக்க 2 மாதங்கள் ஆகிறது. நம்மை நாம் நம்பும் போது அழகாக தெரிவோம். கண்மூடித்தனமாக மற்றவர்கள் சொல்வதை கேட்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். 

இதனை பார்த்த நெட்டிசன்கள், எங்களுக்கு பழைய கிரண் வேண்டும், திருமலை, ஜெமினி, அன்பே சிவம் ஆகிய படங்களில் நடித்த கிரணை மிஸ் பண்ணுகிறோம் என்று பதிவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள், நீங்கள் இப்போதுதான் க்யூட்டாகவும் அழகாகவும் இருக்கிறீர்கள் என்றும், இப்போதுதான் உங்களை பிடித்திருக்கிறது என்றும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் இது ட்ரான்ஸ்ஃபர்மேஷனுக்கான நேரம் என்றும் கூறி வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keira Rathore (@kiran_rathore_official)