தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா.அர்ஜுன் ரெட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகராக மாறினார்,குறிப்பாக பெண்களின் மனம் கவர்ந்த கனவு கண்ணனாக மாறினார் விஜய் தேவர்கொண்டா.பெண்கள் மட்டுமின்றி பல இளைஞர்களின் மனதிலும் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார் விஜய் தேவர்கொண்டா.

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள லிகர் திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து மீண்டும் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் JGM,சமந்தாவுடன் இணைந்து நடிக்கும் குஷி படங்களில் நடிக்கவுள்ளார்.குஷி படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வந்தார் விஜய் தேவர்கொண்டா.

JGM படத்தினை பூரி ஜெகன்னாத்,சார்மீ,இயக்குனர் வம்சி உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த படத்திற்கு JGM ஜனகனமன என பெயரிடப்பட்டுள்ளது.இதன் அறிவிப்பு போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலாகி வருகிறது.அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

தற்போது இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்றும் இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் தொடங்கியுள்ளது என்றும் படக்குழுவினர் ஒரு ஷூட்டிங் வீடியோவுடன் அறிவித்துள்ளனர்.இந்த படம் ஆகஸ்ட் 3ஆம் தேதி 2023-ல் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.