இணையத்தை கலக்கும் சலார் படத்தின் புது ஷூட்டிங் புகைப்படம் !
By | Galatta | June 04, 2022 16:24 PM IST

பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தியது.இதனை அடுத்து வெளியான சாஹோ,ராதே ஷியாம் படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றன.இவற்றை அடுத்து சலார்,ப்ராஜெக்ட் கே,ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.
சலார் படத்தினை கே.ஜி.எப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்குகிறார்.homable films இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படமும் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கேஜி எப் இயக்குனருடன் பிரபாஸ் இணைவதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார்,ஜெகபதி பாபு வில்லனாக நடித்துள்ளார்.மலையாள நடிகர் பிரித்விராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் இருக்கும் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.
From the sets of #Salaar. #Prabhas @prashanth_neel pic.twitter.com/dQRh6BgUIP
— Salaar (@SalaarTheSaga) June 4, 2022
Shruti Haasan as Aadya - exciting glimpse from Prabhas starrer Salaar OUT!
28/01/2022 11:27 AM
Prabhas' Salaar to release on THIS date - Big Breaking Announcement!
28/02/2021 04:32 PM