2 வது மனைவி முன்பே முதல் மனைவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கணவன்! 2 வது மனைவி தற்கொலை..

2 வது மனைவி முன்பே முதல் மனைவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கணவன்! 2 வது மனைவி தற்கொலை.. - Daily news

2 வது மனைவி முன்பே, முதல் மனைவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கணவனின் செயலால், 2 வது மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மண்டலவாடியைச் சேர்ந்த 28 வயதான பிரபாகரன் என்ற இளைஞர், ராணுவத்தில் பணியாற்றி வந்தார். 

இவர், ஐம்மு காஷ்மீரில் பணியாற்றிவிட்டு வந்த நிலையில், இவரது மனைவி 25 வயதான பூர்ணிமா, ஊரில் இருந்து வந்தார். 

இப்படியான நிலையில் தான், கடந்த 2019 ஆம் ஆண்டு விடுமுறையில் ஊருக்கு வந்த பிரபாகர், அதே ஏரியாவைச் சேர்ந்த 18 வயதான சரிகா என்ற சிறுமியை காதலித்து, திருமணம் செய்திருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ராணுவ வீரர் பிரபாகரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

அத்துடன், 18 வயதான சரிகாவை போலீசார், பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர். 

மேலும், அந்த வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பிரபாகரன், தனது 2 வது மனைவியை மிரட்டி வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.

அப்போது தான், அந்த 2 வது மனைவிக்கு “பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பது” அப்போதுதான், 2 வது மனைவியான சரிகாவுக்கு தெரிய வந்தது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த 2 வது மனைவி சரிகா, தனது பெற்றோர் வீட்டிற்கே திரும்பி சென்றுள்ளார். 

இந்த சூழலில் தான், கடந்த 29 ஆம் தேதி பிரபாகரனுக்கு பிறந்தநாள் வந்திருக்கிறது. “இந்த பிறந்த நாளுக்கு நீ வர வேண்டும்” என்று, அவர் 2 வது மனைவிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். 

ஆனால், அந்த 2 வது மனைவி வரவில்லை. இதனால் கோபம் அடைந்த பிரபாகரன், தனது முதல் மனைவி பூர்ணிமாவை அழைத்துக்கொண்டு சரிகாவின் வீட்டுக்குச் சென்று  பிரபாகர், சரிகாவின் வீட்டு வாசலில் வைத்து பிறந்தநாள் கேக் வெட்டி அதனை, தனது முதல் மனைவியான பூர்ணிமாவுக்கு ஊட்டி விட்டிருக்கிறார். ப

இதனையடுத்து, அவரது 2 வது மனைவி பார்த்துக்கொண்டே நின்றுக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது, தனது முதல் மனைவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபாகரன், தொடர்ச்சியாக, சரிகாவின் எதிரிலேயே முதல் மனைவியுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.

இதனை எல்லாம் நேரில் பார்த்த சரிகா, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

ஒரு கட்டத்தில் உச்சகட்டத்தில் விரக்தியடைந்தார் 2 வது மனைவி சரிகா, தனது வீட்டில் இரவில் அனைவரும் தூங்கிய பிறகு, கடிதம் எழுதி வைத்து விட்டு, நடு வீட்டில் தூக்கில் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். 

இதனைப் பார்த்து, கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர்கள், கதறி அழுத நிலையில், போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். 

இதனையடுத்து, தற்கொலை செய்துகொண்ட சரிகாவின் தந்தை புகார் அளித்த நிலையில், ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரனை நடத்தி வருகின்றனர். 

Leave a Comment