“என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்”

இந்தப் பாடலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது.  இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் இசையில் TKS நடராஜன் பாடிய இந்தப் பாடல் பட்டிதொட்டி எங்கும்  கொடி கட்டி பறந்தது. இன்றும் பலரால் ரசிக்கப்படும் இந்தப் பாடல் சில வருடங்களுக்கு முன்னால் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த வாத்தியார் திரைப்படத்தின் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது. 1954-ஆம் ஆண்டு வெளிவந்த ரத்தபாசம் திரைப்படத்தின் மூலம்  நடிகராக அறிமுகமான TKS நடராஜன் நிறைய நாட்டுப்புறப் பாடல்களையும்  பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜிகணேசன் ,ஜெமினி கணேசன் ,ரஜினிகாந்த், கமல்ஹாசன்  பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.1970களில் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை தமிழில் உள்ள அனேக திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் இவரை நாம் பார்த்திருக்க முடியும். சிறு கதாபாத்திரங்களில் சில காட்சிகளில் மட்டுமே திரைப்படங்களில் தோன்றினாலும் ஒரு சிறப்பான நடிப்பினாளும் நகைச்சுவையாலும்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுவார்.  

actor and singer tks natrajan passes away1970-80களில் வந்த நிறைய திரைப்படங்களில் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருப்பார்.  வேலைக்காரர், கோவில் பூசாரி ,துணி வியாபாரம் செய்பவர் ,பெட்டிக்கடைக்காரர், தபால்காரர் பஸ் கண்டக்டர்,பஸ்ஸில் பயணம் செய்யும் பயணியாக என பல படங்களில் சிறு சிறு வேடங்களில்  நடித்திருந்த TKS நடராஜன் அவர்கள் கடைசியாக 2006 ஆம் ஆண்டு வெளிவந்த வாத்தியார் திரைப்படத்தில் இடம்பெற்ற என்னடி முனியம்மா  ரீமேக் பாடலின் பாடல் காட்சியில் நடித்திருந்தார். இந்நிலையில் 87  வயதான TKS நடராஜன் அவர்கள் இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு திரையுலகை சார்ந்த பல பிரபலங்களும் முன்னணி நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.