தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனாவை தடுத்து நிறுத்தும் சக்தி இன்னும் உலகிற்கு கிடைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் மக்களை திக்குமுக்காட வைக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து பல சினிமா பிரபலங்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 

தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவின் நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலமாக  அறிமுகமானார் பூஜா ஹெக்டே. தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில்  நடிக்கிறார். இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. 

pooja hedge kicked the corona virus and thanks fans

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக பூஜா ஹெக்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைபெற்று வந்த பூஜா ஹெக்டே. தற்போது நலமுடன் திரும்பி இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தோடு தெரிவித்துள்ளார்.அந்தப் பதிவில் 

“எனக்காக நீங்கள் காட்டிய அன்பிற்கு மிக்க நன்றி. இப்போது நான் நலமுடன் இருக்கிறேன் கொரோனா வைரஸை உதைத்து தள்ளி விட்டேன். உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் தான் என்னை  குணப்படுத்தும் மாயாஜாலத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதற்காக நான் எப்போதும் நன்றியோடு இருப்பேன் அனைவரும்  பாதுகாப்பாக இருங்கள்" 

என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூஜா ஹெக்டே குணமடைந்த நிலையில் சில நாட்களில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pooja Hegde (@hegdepooja)