தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் நடிகை திரிஷா. 2002ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான நடிகை திரிஷா, கிட்டத்தட்ட 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் ரஜினி, கமல் ,அஜித் ,விஜய் ,விக்ரம், சூர்யா என அனைவருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.  

திரிஷாவின் பிறந்த தினமான நேற்று மே 4ஆம் தேதி அனைத்து சமூக வலைதளங்களிலும் திரிஷாவின் ரசிகர்கள் த்ரிஷாவிற்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். திரையுலகை சார்ந்த பிரபலங்களும் திரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் அவர்கள் அனைவருக்கும்  நன்றி தெரிவிக்கும் விதமாக திரிஷா நேற்று ஒரு பதிவிட்டிருந்தார்.  

“உலகம் சந்தித்திருக்கும் இந்த கொடுமையான நேரத்தில் குறிப்பாக இந்தியாவில் இருக்கும் இந்த கடினமான காலகட்டத்தில் உங்களின் நேரங்களை எனக்காக ஒதுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி!!

நான் நலமாக இருக்கிறேன் உலகமும் மீண்டு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். ஞநாம் அனைவரும் சேர்ந்து அப்பொழுது கொண்டாடுவோம்.  உங்கள் அனைவருக்கும் எனது அன்பும் பிரார்த்தனைகளும் எப்போதும் இருக்கும் அன்புடன் திரிஷா”

என தெரிவித்துள்ளார்.

 கடைசியாக திரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு வெளியாகிய நிலையில் தொடர்ந்து திரிஷாவின் திரைப்படங்கள் வெளியாவதற்கு தயாராகி இருக்கின்றன. குறிப்பாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.