பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார் நடிகை தீபிகா படுகோனே. 2006 ஆம் ஆண்டு வெளியான ஐஸ்வர்யா என்னும் கன்னட திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான தீபிகா படுகோனே.  பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஓம் சாந்தி ஓம் திரைப்படம் மூலமாக இந்தியில் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வந்த தீபிகா படுகோனே தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து கோச்சடையான் திரைப்படத்திலும் பணியாற்றியுள்ளார். 

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனே சில தினங்களுக்கு முன்பு தனது தந்தையும் இந்திய பேட்மிட்டன் வீரருமான பிரகாஷ் படுகோனே மற்றும் குடும்பத்தாரோடு சில நாட்கள் கழிப்பதற்காக பெங்களூரு சென்றார். 

deepika padukone tested positive for corona

தீபிகா  படுகோனேவின் தந்தையும் தாயாரும்  காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.  இந்த நிலையில் நேற்று  தீபிகா படுகோனேவின் தாய் மற்றும் தந்தைக்கு கொரானா தொற்று உறுதியான நிலையில் வீட்டில் இருக்கும் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டனர் பின்பு தீபிகா படுகோனேவும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் தீபிகா படுகோனேவிற்கும் கொரோனா தொற்று உறுதியானதால் தீபிகா படுகோன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்  கிடைத்துள்ளது. 

இதனால் தீபிகா படுகோனேவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தீபிகா விரைவில் குணமடைய வேண்டி தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். உலக அளவில் இருக்கும் இந்த குரல் நாட்டின் இரண்டாம் அலையின் வீரியத்தால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து சினிமா பிரபலங்களும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதை பார்க்க முடிகிறது.