உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி தமிழில் வெளியான வணக்கம் சென்னை திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அனிருத் இசையமைத்த இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான காளி திரைப்படத்தை இயக்கினார் கிருத்திகா உதயநிதி.

பிரபல தென்னிந்திய நடிகரான ஜெயராம் அவர்களின் மகன் காளிதாஸ் ஜெயராம்  குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகில் அறிமுகம் ஆனார். 2016ஆம் ஆண்டு தமிழில் வெளியான மீன் குழம்பும் மண் பானையும் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் நடித்து வந்த காளிதாஸ் ஜெயராம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்  வெளிவந்த பாவக் கதைகள் எனும் ஆன்தாலஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். 

kalidhas jayram in the lead role of director kirthiga udhyanithis next

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் தங்கம் என்ற எபிசோடில் சத்தார் என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த காளிதாஸ் ஜெயராம் தென்னிந்திய ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்டார். சத்தார் கதாபாத்திரத்தில் நடித்த காளிதாஸ் ஜெயராமின் நடிப்பை மொத்த திரையுலகமும் கண்டு வியந்து அவரை பாராட்டி தள்ளியது. இந்நிலையில் அடுத்து காளிதாஸ் ஜெயராம் எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் எந்த இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்று திரையுலகில்  அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்க உள்ளார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. முன்னதாக ஜாக் அண்ட் ஜில் என்ற மலையாளத் திரைப்படத்தில் இவர் நடித்து வெளிவர உள்ள நிலையில் அடுத்ததாக கிருத்திகா உதயநிதி திரைப்படத்தில் இவர் நடிக்க உள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது