"வேற லெவல் சார் நீங்க..!"- வைரலான ராவடி பாடல் மீம் வீடியோவை RECREATE செய்த ARரஹ்மான்... ட்ரண்டாகும் இன்ஸ்டாகிராம் REEL இதோ!

ராவடி பாடல் மீம் வீடியோவை RECREATE செய்த ஏ ஆர் ரஹ்மான்,A r rahman recreated the viral reel video raawadi song pathu thala | Galatta

இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற இசை அமைப்பாளராக தொடர்ந்து தனது இசை மழையால் மக்களை மகிழ்வித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் பிரபலமான ஒரு மீம் வீடியோவை தற்போது ரீ கிரியேட் செய்திருக்கும் இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்திய சினிமாவின் நட்சத்திர இசையமைப்பாளராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களுக்கு  இடைவிடாது சிறந்த இசையை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வரும் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த 2023 ஆம் ஆண்டிலும் தொடக்கத்தில் சிலம்பரசன்.TR - கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள பத்து தல படத்தில் தனது இசையால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

தொடர்ந்து ரிலீஸான இயக்குனர் மணிரத்னத்தின் பிரம்மிப்பான பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தில் தன் இசையால் ரசிகர்களை மயக்கியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்தடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்து, வரும் ஜூன் 29ம் தேதி ரிலீஸாகவுள்ள மாமன்னன், சிவகார்த்திகேயனின் ஏலியன் சயின்ஸ் ஃபிக்சன் படமான அயலான், மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியமான மொய்தீன் பாய் எனும் கௌரவ வேடத்தில் நடிக்கும் லால் சலாம் ஆகிய திரைப்படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார்.

இது தவிர மலையாளத்தில் பிரித்திவிராஜ் நடிக்கும் ஆடு ஜீவிதம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மௌனப்படமான காந்தி டாக்ஸ், தனுஷ் நடிக்கும் ஹிந்தி படமான தேரே இஷ்க் மெயின் ஆகிய படங்களுக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் நீண்ட இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்தினம் காம்பினேஷனில் வர இருக்கும் KH234 படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தங்களுக்கு என தனி பாணியில் பாடல்கள் உருவாகும் விதம் குறித்த நகைச்சுவையான ரீல் வீடியோக்களை வெளியிட்டு வரும் யூட்யூபர்களான விக்ரம் மற்றும் ஹரி ஆகியோரது ராவடி பாடலின் ரீல் வீடியோவை தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ரிக்ரியேட் செய்திருக்கும் புதிய வீடியோ வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக இந்த யூட்யூபர்களது ரஞ்சிதமே பாடலின் ரீல் வீடியோ குறித்து தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டு பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தனது ராவடி பாடலின் வீடியோவின் ரீக்ரியேட் வீபியோவில், நடித்திருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.  பத்து தல படத்தில் இடம்பெற்ற இந்த ராவடி பாடலை பாடிய பாடகி சுபா, முன்னாள் நின்று பாடலைப் பாட பின்னால் பாடலாசிரியர் சினேகன் அருகில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் நின்றபடி நடித்திருக்கும் அந்த வீடியோவை பாடகி சுபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். வைரலாகும் அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Shuba - Singer & Musician (@shubamusic)

80 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேலாளர்.. அதிரடி நடவடிக்கை எடுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா..!
சினிமா

80 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேலாளர்.. அதிரடி நடவடிக்கை எடுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா..!

ஆக்ஷனில் அலறவிடும் காஜல் அகர்வால்.. பிறந்தநாள் பரிசாக வெளிவந்த ‘காஜல் 60’ பட Glimpse..!
சினிமா

ஆக்ஷனில் அலறவிடும் காஜல் அகர்வால்.. பிறந்தநாள் பரிசாக வெளிவந்த ‘காஜல் 60’ பட Glimpse..!

சினிமா

"இந்த முறை தளபதி விஜய் அண்ணாவிற்காக!"- லியோ பட "நா ரெடி" பாடலை எழுதிய விக்ரம் பட பாடலாசிரியர்! சூப்பர் மாஸ் தகவல் இதோ