ஜெயம் TO பொன்னியின் செல்வன் 2... ஜெயம் ரவியின் அட்டகாசமான 20வருட திரைப்பயணம்... எமோஷனலான அறிக்கை இதோ!

தனது 20 வருடத் திரைப் பயணம் குறித்து ஜெயம் ரவி அறிக்கை,Jayam ravi emotional statement about 20 years of his cinema journey | Galatta

தனக்கென தனி ஸ்டைலில் ஒட்டுமொத்த ரசிகர்கள் விரும்பும் தரமான படைப்புகளை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் ஜெயம் ரவி தற்போது தனது திரை பயணத்தில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார். கடந்த 23ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயம் திரைப்படத்திலிருந்து தமிழ் சினிமாவில் நடிகராக களம் இறங்கிய நடிகர் ஜெயம் ரவி தடுத்த நடித்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி தாஸ் மழை இதயத்துடன் உனக்கும் எனக்கும் தீபாவளி சந்தோஷ் சுப்பிரமணியம் தாம் தூம் பேராண்மை எங்கேயும் காதல் நிமிர்ந்து நில் ரோமியோ ஜூலியட் தனி ஒருவன் பூலோகம் மிருதன் போகன் அடங்கமறு கோமாளி என கிட்டதட்ட எல்லா திரைப்படங்களும் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

கடைசியாக சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட்டான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக மிக சிறப்பாக நடித்த ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் வரிசையாக வெளிவந்து மக்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. அந்த வகையில் வாமனன், என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் I.அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் இறைவன். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இறைவன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் சைரன் திரைப்படத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த சைரன் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடரந்து சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் & ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் தனது திரைப்பயணத்தின் 30வது திரைப்படமாக உருவாகும் JR30 படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். அடுத்ததாக வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் தயாரிப்பில் பிரம்மாண்ட படைப்பாக 100 கோடி ரூபாய் செலவில் தனது 32 வது உருவாகும் JR32 படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார். இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் தற்போது தனது திரை பயணத்தில் 20 ஆண்டுகளை கடந்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், “அளவில்லாத நன்றியுடன் இதயம் முழுக்க உணர்வுகளோடு என் வாழ்வின் முக்கியமான இந்த மைல் கல்லை அடைந்ததை கொண்டாடுகிறேன். ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகத்துறையினர், உடன் நடித்த நட்சத்திரங்கள், நண்பர்கள் மற்றும் எனது குடும்பம் என எப்போதும் என் மீது அன்பும் ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். ஜெயம் படத்தில் இருந்து பொன்னியின் செல்வன் 2 படம் வரை என்னை நம்பி உங்களது படைப்பில் எனக்கு வாய்ப்பளித்த அனைத்து அட்டகாசமான தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 20 ஆண்டுகால பயணத்தை கொண்டாடும்போது இந்த பயணத்தில் இத்தனை ஆண்டுகளாக ஒரு அங்கமாக இருந்த ஒவ்வொருத்தருக்கும் எனது ஆழ் மனதில் இருந்து நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என ஜெயம் ரவி பதிவிட்டு இருக்கிறார். நடிகர் ஜெயம் ரவியின் அந்த பதிவு இதோ…
 

I feel immense gratitude and a heart filled with emotions as I celebrate a significant milestone in my life. I want to express my heartfelt thanks to my incredible fans, press, media, Co stars, friends and always my family for their constant love & support. To the incredible…

— Jayam Ravi (@actor_jayamravi) June 21, 2023

'ஸ்டன்ட்ஸ் பலவீனமானவர்களுக்கானது அல்ல!'- ஷூட்டிங்கில் காயமடைந்த மாநாடு பட நாயகி கல்யாணி பிரியதர்ஷன்! புகைப்படங்கள் உள்ளே
சினிமா

'ஸ்டன்ட்ஸ் பலவீனமானவர்களுக்கானது அல்ல!'- ஷூட்டிங்கில் காயமடைந்த மாநாடு பட நாயகி கல்யாணி பிரியதர்ஷன்! புகைப்படங்கள் உள்ளே

தளபதி விஜய் பிறந்தநாளில் காத்திருக்கும் பக்கா மாஸ் சர்ப்ரைஸ்... லோகேஷ் கனகராஜ் கொடுத்த பிளடி ஸ்வீட்டான அறிவிப்பு இதோ!
சினிமா

தளபதி விஜய் பிறந்தநாளில் காத்திருக்கும் பக்கா மாஸ் சர்ப்ரைஸ்... லோகேஷ் கனகராஜ் கொடுத்த பிளடி ஸ்வீட்டான அறிவிப்பு இதோ!

'அம்பிகாபதி உலகத்தில் இருந்து.!'- 3வது முறை இணையும் தனுஷ் - ஆனந்த்.L.ராய் - ARரஹ்மான் கூட்டணி… புதிய ஹிந்தி பட அதிரடி ப்ரோமோ இதோ!
சினிமா

'அம்பிகாபதி உலகத்தில் இருந்து.!'- 3வது முறை இணையும் தனுஷ் - ஆனந்த்.L.ராய் - ARரஹ்மான் கூட்டணி… புதிய ஹிந்தி பட அதிரடி ப்ரோமோ இதோ!