"இந்த முறை தளபதி விஜய் அண்ணாவிற்காக!"- லியோ பட "நா ரெடி" பாடலை எழுதிய விக்ரம் பட பாடலாசிரியர்! சூப்பர் மாஸ் தகவல் இதோ

லியோ பட நா ரெடி பாடலை எழுதிய விக்ரம் பட பாடலாசிரியர்,vikram movie lyricist penned for thalapathy vijay in leo naa ready | Galatta

தளபதி விஜயின் பிறந்தநாள் பரிசாக வெளிவரவருக்கும் லியோ திரைப்படத்தின் முதல் பாடல் நா ரெடி பாடலை எழுதிய பாடலாசிரியர் குறித்த அறிவிப்பு வெளியானது. தளபதி விஜயின் திரைப்பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் தான் லியோ. மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணி மீண்டும் இணைவதாலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றியாலும் லியோ திரைப்படத்தின் மீது அளவு கடந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பின் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி, பாபு ஆண்டனி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும், லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து மேயாத மான், ஆடை மற்றும் குலு குலு ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். 

அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். லியோ திரைப்படம் இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்பே தளபதி விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என தயாரிப்பாளர் அறிவித்திருந்த நிலையில் நேற்று ஜூன் 16ஆம் தேதி லியோ திரைப்படத்தின் அட்டகாசமான போஸ்டரோடு “நா ரெடி” எனும் பாடல் ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்ற அதிரடி அறிவிப்பு வெளியானது. இந்த போஸ்டரில் தளபதி விஜயின் புதிய லுக் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. 

இந்த "நா ரெடி" பாடலை விக்ரம் திரைப்படத்தில் "போர்க்கண்ட சிங்கம்" மற்றும் "விக்ரம் டைட்டில் ட்ராக்" பாடல்களை எழுதிய இயக்குனர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரும் பாடலாசிரியருமான விஷ்ணு எடவன் லியோ படத்தின் நான் ரெடி பாடலையும் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விஷ்ணு எடவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "லியோ 'நா ரெடி' என சொல்கிறார்... பாடல் வரிகளை எழுதி இருக்கிறேன் இந்த முறை தளபதி விஜய் அண்ணா அவர்களுக்காக... நன்றி லோகேஷ் கனகராஜ் அண்ணா, அனிருத் ப்ரோ மற்றும் ஜெகதீஷ் ப்ரோ #LEO" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். பாடலாசிரியர் விஷ்ணு எடவனின் அந்த பதிவு இதோ…
 

LEO says NA READY 🤩
Penning the lyrics this Time for our Thalapathy @actorvijay Anna...
Nandri @Dir_Lokesh Anna @anirudhofficial bro @Jagadishbliss bro#LEO https://t.co/v0ah80U2t0

— Vishnu Edavan (@VishnuEdavan1) June 16, 2023

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான ‘மாமன்னன்’ டிரைலர் எப்போது..? – அட்டகாசமான அப்டேடுடன் வைரலாகும் Glimpse உள்ளே..
சினிமா

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான ‘மாமன்னன்’ டிரைலர் எப்போது..? – அட்டகாசமான அப்டேடுடன் வைரலாகும் Glimpse உள்ளே..

LCU - வில் இணைந்த தளபதி விஜயின் ‘லியோ’.. - கைதி பட நடிகர் கொடுத்த அப்டேட்.. வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

LCU - வில் இணைந்த தளபதி விஜயின் ‘லியோ’.. - கைதி பட நடிகர் கொடுத்த அப்டேட்.. வைரலாகும் பதிவு உள்ளே..

“வடிவேலு காமெடி வெச்சதால அந்த படம் ஓடல..” உண்மையை உடைத்த சுந்தர் சி – சுவாரஸ்யமான தகவல் கொண்ட நேர்காணல் இதோ..
சினிமா

“வடிவேலு காமெடி வெச்சதால அந்த படம் ஓடல..” உண்மையை உடைத்த சுந்தர் சி – சுவாரஸ்யமான தகவல் கொண்ட நேர்காணல் இதோ..