'ஸ்டன்ட்ஸ் பலவீனமானவர்களுக்கானது அல்ல!'- ஷூட்டிங்கில் காயமடைந்த மாநாடு பட நாயகி கல்யாணி பிரியதர்ஷன்! புகைப்படங்கள் உள்ளே

ஷூட்டிங்கில் காயமடைந்த மாநாடு பட நாயகி கல்யாணி பிரியதர்ஷன்,maanaadu actress kalyani priyadarshan injured in antony movie shoot | Galatta

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் புதிய மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்த போது காயம் அடைந்திருக்கிறார். இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களின் மகளான நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ஹலோ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து சித்ராலஹரி மற்றும் ராணாரங்கம் என அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக களமிறங்கினார்.

தொடர்ந்து மலையாளத்தில் வரானே ஆவசியமுண்டு, என்ற படத்தில் நடித்த கல்யாணி பிரிய தர்ஷன் கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மாநாடு திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். பின்னர் நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்த மரக்கார் - அரபிக் கடலிண்டே சிம்ஹம் படத்தில் நடித்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தொடர்ந்து நடித்த ஹிரிதயம் திரைப்படம் தென்னிந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அடுத்தடுத்து ப்ரோ டாடி மற்றும் தள்ளுமாலா என ஹிட் படங்களில் நடித்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் அடுத்த வெளிவர இருக்கும் திரைப்படம் சேஷம் மைக்கேல் ஃபாத்திமா. தளபதி விஜயின் மேலாளரும் தயாரிப்பாளருமான ஜெகதீஷ் பழனிசாமி அவர்கள் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த சேஷம் மைக்கேல் பாத்திமா படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடல் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தனது அடுத்த படமாக ஆன்டனிக்கான மலையாள படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். ஜோஜூ ஜார்ஜ், நைலா உஷா, செம்பன் வினோத் ஆகியோருடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த ஆண்டனி திரைப்படத்தை இயக்குனர் ஜோஷி இயக்கி வருகிறார். ராஜேஷ் வர்மா கதை திரைக்கதையில் ஐன்ஸ்டின் மீடியா தயாரிக்கும் ஆண்டனி திரைப்படத்திற்கு ரெனடைவ் ஒளிப்பதிவில் ஷியாம் சசிதரன் படத்தொகுப்பு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டனி திரைப்படத்தின் ஆக்சன் காட்சிகளை படமாக்கும் போது நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டனி திரைப்படத்தின் முக்கியமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு இருந்த போது எதிர்பாராத விதமாக அதில் நடித்த நடிகை கல்யாணி பிரியதர்சனின் கையில் அடிபட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தனது இன்ஸ்டாடிராமில் ஸ்டேட்டஸில் வீடியோவாக பகிர்ந்திருக்கும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் "ஸ்டன்ட்ஸ் பலவீனமானவர்களுக்கானது அல்ல" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் நடிகை கல்யாணி பிரியதர்ஷினின் அந்த புகைப்படங்கள் இதோ…
leo movie first look releasing on thalapathy vijay birthday lokesh kanagaraj

சினிமா

"தினமும் 4-5 மணி நேரம் மேக்கப்"- சீயான் விக்ரமின் தங்கலான் பட சவால்கள் பற்றி மாளவிகா மோகனன் பதிவு! வைரல் புகைப்படங்கள் உள்ளே

துணிவு படத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி ஆக்சன் படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

துணிவு படத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி ஆக்சன் படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே வெளியான தளபதி விஜயின் லியோ டைட்டில் ... எப்போது தெரியுமா?- டிரெண்டிங் வீடியோ இதோ!
சினிமா

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே வெளியான தளபதி விஜயின் லியோ டைட்டில் ... எப்போது தெரியுமா?- டிரெண்டிங் வீடியோ இதோ!