தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம்!- வேற லெவல் சம்பவம் இருக்கு… லியோ பட மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

தளபதி விஜய் பிறந்தநாளில் லியோ பட ஃபர்ஸ்ட் லுக்,thalapathy vijay birthday treat leo movie first look poster out now | Galatta

தளபதி விஜயின் பிறந்த நாளான இன்று ஜூன் 22 ஆம் தேதி அவரது பிறந்த நாள் பரிசாக லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகராகவும் பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகராகவும் விளங்கும் தளபதி விஜய் இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மக்களின் நாயகரான தளபதி விஜய் அவர்களுக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

ஒரு படம் தொடங்குவதற்கு முன்பிருந்தே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது லியோ திரைப்படம் தான். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என அறிவித்த சமயத்தில் இருந்து நாளுக்கு நாள் எக்கச்சக்கமான ஆர்வத்தை லியோ திரைப்படம் ஏற்படுத்த நிறைய காரணங்கள் இருக்கின்றன. மாநகரம் & கைதி என அடுத்தடுத்து கவனிக்க வைக்கும் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது மூன்றாவது படத்திலேயே தளபதி விஜய் உடன் இணைந்த மாஸ்டர் திரைப்படம் மெகா ஹிட்டாக, நான்காவது படமாக உலகநாயகன் கமல்ஹாசன் உடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்த விக்ரம் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாக பெரும் வெற்றி பெற்றது. 

எனவே மாஸ்டர் வெற்றிக்கு பின் இணையும் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ படத்தின் மீது எதிர்பார்ப்புகளும் குவிந்தன. அது மட்டுமின்றி கைதி மற்றும் விக்ரம் திரைப்படங்களில் இருந்து உருவான LCU என்ற யுனிவர்சில் தளபதி விஜயின் லியோ படமும் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது. தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படம் இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. முன்னதாக லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது அடுத்த கட்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த லியோ படத்தின் முதல் பாடலான “நா ரெடி” எனும் பாடல் இன்று தளபதி விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தளபதி விஜயின் பிறந்தநாளுக்கு முதல் ஸ்பெஷல் பரிசாக லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. சரியாக நள்ளிரவு 12 மணி அளவில் வெளிவந்திருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது ஒட்டுமொத்த சோசியல் மீடியாக்களையும் அதிர வைத்திருக்கிறது. தளபதி விஜயின் பக்கா மாஸான லியோ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

#LeoFirstLook is here! Happy Birthday @actorvijay anna!
Elated to join hands with you again na! Have a blast! 🤜🤛❤️#HBDThalapathyVIJAY #Leo 🔥🧊 pic.twitter.com/wvsWAHbGb7

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 21, 2023

தளபதி விஜய் பிறந்தநாளில் காத்திருக்கும் பக்கா மாஸ் சர்ப்ரைஸ்... லோகேஷ் கனகராஜ் கொடுத்த பிளடி ஸ்வீட்டான அறிவிப்பு இதோ!
சினிமா

தளபதி விஜய் பிறந்தநாளில் காத்திருக்கும் பக்கா மாஸ் சர்ப்ரைஸ்... லோகேஷ் கனகராஜ் கொடுத்த பிளடி ஸ்வீட்டான அறிவிப்பு இதோ!

'அம்பிகாபதி உலகத்தில் இருந்து.!'- 3வது முறை இணையும் தனுஷ் - ஆனந்த்.L.ராய் - ARரஹ்மான் கூட்டணி… புதிய ஹிந்தி பட அதிரடி ப்ரோமோ இதோ!
சினிமா

'அம்பிகாபதி உலகத்தில் இருந்து.!'- 3வது முறை இணையும் தனுஷ் - ஆனந்த்.L.ராய் - ARரஹ்மான் கூட்டணி… புதிய ஹிந்தி பட அதிரடி ப்ரோமோ இதோ!

சினிமா

"தினமும் 4-5 மணி நேரம் மேக்கப்"- சீயான் விக்ரமின் தங்கலான் பட சவால்கள் பற்றி மாளவிகா மோகனன் பதிவு! வைரல் புகைப்படங்கள் உள்ளே