வரிசையாக கைவசம் அசத்தலான படங்கள் - புதிய வெப் சீரிஸ்... அடுத்தடுத்த திட்டங்களை பகிர்ந்த வாணி போஜனின் சிறப்பு பேட்டி!

தனது அடுத்தடுத்த படங்கள் வெப் சீரிஸ் பற்றி பேசிய வாணி போஜன்,Vani bhojan about her next movies and web series in galatta cinema interview | Galatta

பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்தின் கதாநாயகியான நடிகை வாணி போஜன் தனது நடிப்பில் அடுத்தடுத்து தயாராக இருக்கும் புதிய வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் சின்னத்திரையில் நடிகையாக களமிறங்கி தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகையாக களமிறங்கிய நடிகை வாணி போஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளிவந்த ஹாரர் திரில்லர் படமான மிரள் படங்கள் கதாநாயகியாக நடித்த வாணி போஜன் நடிப்பில் அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. 

அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான M.சசிகுமார் அவர்களுடன் இணைந்து நடித்த பகைவனுக்கு அருள்வாய், பரத்துடன் இணைந்து நடித்த லவ் மற்றும் கேசினோ என வாணி போஜன் நடித்த திரைப்படங்கள்  நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இதனை அடுத்து பிரபுதேவாவுடன் இணைந்து ரேக்ளா, விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஆர்யன், மற்றும் தமிழ் & தெலுங்கில் நடிகர் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக தற்போது வாணி போஜன் நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாது வெப் சீரிஸிலும் முழு கவனம் செலுத்தி வரும் வாணி போஜன் இதுவரை ட்ரிபிள்ஸ், தமிழ் ராக்கர்ஸ் மற்றும் செங்களம் உள்ளிட்ட மூன்று வெப் சீரிஸ்களில் நடித்திருக்கிறார். 

இதனிடையே நடிகை வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க அடுத்த வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் தான் பாயும் ஒளி நீ எனக்கு. இயக்குனர் கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, நடிகை வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தனஞ்ஜெயா மற்றும் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் கார்த்திக் அத்வைத் தயாரித்து இயக்கும் ஆக்சன் திரில்லர் படமாக தயாராகி இருக்கும் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்திற்கு பரியேறும் பெருமாள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, C.S.பிரேம் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் சாகர் பாடல்களுக்கு இசையமைக்க, இசையமைப்பாளர்கள் சன்னி மற்றும் சாகித் இணைந்து பின்னணி இசை சேர்த்துள்ளனர். SP சினிமாஸ் நிறுவனம் வெளியிடும் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படம் வருகிற ஜூன் 23ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில் நமது கலாட்டா சினிமா சேனலுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த நடிகை வாணி போஜன் தான் அடுத்தடுத்து நடித்துவரும் படைப்புகள் குறித்தும் மனம் திறந்து பேசினார். அப்படி பேசுகையில், "விதார்த் சாருடன் ஒரு படம் நடித்திருக்கிறேன். அது அடுத்த மாதம் ரிலீஸாக இருப்பதாக கேள்விப்பட்டேன். நீண்ட நாட்களாக அந்த படத்திற்காக காத்திருக்கிறேன். வாலி என்ற இயக்குனரோடு ஒரு படம், எல்லாமே கொஞ்சம் வித்தியாசமான படங்கள் தான். எல்லாமே வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஒரே மாதிரி இருக்கிறது என சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன். தொடர்ந்து அதர்வாவுடன் ஒரு படம் அதன் பிறகு ஒரு புதிய வெப் சீரிஸில் தற்போது ஒப்பந்தமாகி இருக்கிறேன்." என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட வாணி போஜனின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

ஆக்ஷனில் அலறவிடும் காஜல் அகர்வால்.. பிறந்தநாள் பரிசாக வெளிவந்த ‘காஜல் 60’ பட Glimpse..!
சினிமா

ஆக்ஷனில் அலறவிடும் காஜல் அகர்வால்.. பிறந்தநாள் பரிசாக வெளிவந்த ‘காஜல் 60’ பட Glimpse..!

சினிமா

"இந்த முறை தளபதி விஜய் அண்ணாவிற்காக!"- லியோ பட "நா ரெடி" பாடலை எழுதிய விக்ரம் பட பாடலாசிரியர்! சூப்பர் மாஸ் தகவல் இதோ

“பணத்திற்காக நான் வேலை செய்வதே இல்லை!”- தான் எந்த மாதிரியான நடிகர் என விவரித்த SJசூர்யா! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

“பணத்திற்காக நான் வேலை செய்வதே இல்லை!”- தான் எந்த மாதிரியான நடிகர் என விவரித்த SJசூர்யா! ட்ரெண்டிங் வீடியோ