80 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேலாளர்.. அதிரடி நடவடிக்கை எடுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா..!

ராஷ்மிகாவை ஏமாற்றிய அவரது மேலாளர் விவரம் உள்ளே - Rashmika mandana manager allegedly cheats her of 80 lakh | Galatta

சம கால இந்திய சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைககளில் முக்கியமானவர் ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்டி என்ற கன்னட திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பின் தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடிக்க தொடங்கினார். அதன்படி தெலுங்கில் கடந்த 2018 ம் ஆண்டில், செல்லோ, கீதா கோவிந்தம், தேவதாஸ் ஆகிய படங்களில் நடித்தார் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து மூன்று படங்களிலும் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார். குறிப்பாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் ராஷ்மிகாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. அதை தொடர்ந்து ராஷ்மிகா தெலுங்கு திரையுலகில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.

கடந்த 2021 ல் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழிலும் ராஷ்மிகா மந்தனா அறிமுகமானார் ராஷ்மிகா. தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் வரவேற்பை பெற்ற ரஷ்மிகா. அதே 2021 ல் பான் இந்திய திரைப்படமாக வெளியான புஷ்பா தி ரைஸ் படம் மூலம் இந்திய அளவு பிரபலமடைந்தார். இப்படத்தை தொடர்ந்து தற்போது ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும் தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா நடித்த வாரிசு படம் இந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது.  தற்போது ராஷ்மிகா மந்தனா இந்தியில் ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் அதே நேரத்தில் தெலுங்கில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திலும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு முக்கிய நட்சத்திரங்களின் படங்களில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து விடுகிறார். அதன்படி தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவிடம் நீண்ட காலமாக மேலாளராக ஒருவர் பணியாற்றி  வந்துள்ளார். சில காலமாக கணக்கு வழக்கில் சந்தேகம் ஏற்பட அதன்படி அவரது மேலாலாளர் ரூ 80 லட்சம் பண மோசடி செய்திருப்பது ராஷ்மிகா மந்தனா கவனத்திற்கு வந்துள்ளது. பல்வேறு வகைகளில் நடந்த மோசடியை உறுதி செய்த ராஷ்மிகா மேலாளாரை உடனடியாக வேலையை விட்டு நீக்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்வை பேசுபொருளாக மாற்ற வேண்டாம் என்பதால் தனிப்பட்ட முறையில் இந்த பிரச்சனையை ராஷ்மிகா மந்தனா முடித்துள்ளதா கூறப்படுகிறது.

“பணத்திற்காக நான் வேலை செய்வதே இல்லை!”- தான் எந்த மாதிரியான நடிகர் என விவரித்த SJசூர்யா! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

“பணத்திற்காக நான் வேலை செய்வதே இல்லை!”- தான் எந்த மாதிரியான நடிகர் என விவரித்த SJசூர்யா! ட்ரெண்டிங் வீடியோ

“அலட்சியமா விட்டதால் தான் இப்படி ஆச்சு” கண்கலங்கிய பிரபல நடிகர் பவா லக்ஷ்மணன் –  முழு வீடியோ உள்ளே..
சினிமா

“அலட்சியமா விட்டதால் தான் இப்படி ஆச்சு” கண்கலங்கிய பிரபல நடிகர் பவா லக்ஷ்மணன் – முழு வீடியோ உள்ளே..

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான ‘மாமன்னன்’ டிரைலர் எப்போது..? – அட்டகாசமான அப்டேடுடன் வைரலாகும் Glimpse உள்ளே..
சினிமா

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான ‘மாமன்னன்’ டிரைலர் எப்போது..? – அட்டகாசமான அப்டேடுடன் வைரலாகும் Glimpse உள்ளே..