ஆக்ஷனில் அலறவிடும் காஜல் அகர்வால்.. பிறந்தநாள் பரிசாக வெளிவந்த ‘காஜல் 60’ பட Glimpse..!

காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகும் 60 வது படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது -  Kajal Aggarwal 60th film title glimpse video out now | Galatta

தென்னிந்திய திரைத்துறையின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இன்று அவரது பிறந்தநாளை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தொடர் அப்டேட்டுகளுடன் வாழ்த்துகளும் காஜல் அகர்வாலுக்கு குவிந்து வருகிறது. கடந்த 2007 தெலுங்கில் வெளியான லக்ஷ்மி கல்யாணம் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்த காஜல் தன் நடிப்பினால் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பின் தெலுங்கு மற்றும் தமிழில் காஜல் அகர்வாலுக்கு பட வாய்புகள் குவிந்து வந்தது. தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்தார். அதை தொடர்ந்து காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்து வந்தார். அதன்படி தமிழில் தளபதி விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார் காஜால். அதே நேரத்தில் தெலுங்கு திரையுலகிலும் பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் சரண், மகேஷ் பாபு போன்றோரின் படங்களிலும் நடித்து பிரபலமானார். காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச புகழ் பெற்று இருந்த நிலையில் காஜல் தொழிலதிபரை 2020 ல் திருமணம் செய்து கொண்டார். தற்போது காஜலுக்கு அழகான ஆண் குழந்தை உள்ளது. தனிப்பட்ட வாழ்கையில் பிஸியாக இருந்து வந்த காஜல் அகர்வால் திரைப்படங்களில் நடிப்பதில் ஒய்வு எடுத்துக் கொண்டார். அதன்பின் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்படி சமீபத்தில் தமிழில் கோஸ்டி, கருங்காப்பியம் ஆகிய திரைப்படங்கள் வெளியானது. தற்போது காஜல் அகர்வால் ‘பகவந்த் கேசரி’ என்ற தெலுங்கு திரைப்படங்களிலும் ‘உமா’ என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார். இதில் முக்கியமான இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பின் காஜல் தற்போது மும்முரமாக தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார். இதனிடையே காஜல் அகர்வாலின் 60 வது திரைப்படம் குறித்த அப்டேட் அவரது பிறந்த நாளையொட்டி வெளியாகியுள்ளது. ‘காஜல் 60’ என்று அழைக்கப்பட்டு இருந்த இப்படத்தின் டைட்டிலை வித்யாசமான முறையில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர் படக்குழு.

காவலதிகாரி வேடத்தில் காஜல் அகர்வால் மாஸாக என்ட்ரி கொடுத்து கைதியை அடித்து வாக்குமூலம் வாங்குவது போன்ற காட்சியுடன் படத்தின் டைட்டில் ‘சத்யாபாமா’ என்று அறிவித்துள்ளனர் படக்குழு. இயக்குனர் அகில் தேக்கலா இயக்கத்தில் வித்யாசமான கதாபாத்திரத்தில் காஜல் அதே பொலிவுடன் வரும் காட்சி தற்போது ரசிகர்களால் வெகுவாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக ‘சத்யா பாமா’ திரைப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

 

My next with a super talented team! Something I've never done before ❤️‍🔥#Satyabhama 🔥
- https://t.co/FCN3ckmAA8

Hope you love it ❤️@AurumArtsoffl @akhildegala_ @sashitikka @bobytika @sumanchikkala @mohitkrsna @SriCharanpakala @kalyankodati @kumar_tv5cinema @RekhaBoggarapupic.twitter.com/6mtCZP53KB

— Kajal Aggarwal (@MsKajalAggarwal) June 18, 2023

இதை தவிர காஜல் அகர்வால் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் தளபதி 68 படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஷன் ஹீரோயினாக மாஸ் காட்டும் காஜல் அகர்வாலின் சத்யா பாமா படத்தின் டைட்டில் வீடியோ இதோ..

 

“அலட்சியமா விட்டதால் தான் இப்படி ஆச்சு” கண்கலங்கிய பிரபல நடிகர் பவா லக்ஷ்மணன் –  முழு வீடியோ உள்ளே..
சினிமா

“அலட்சியமா விட்டதால் தான் இப்படி ஆச்சு” கண்கலங்கிய பிரபல நடிகர் பவா லக்ஷ்மணன் – முழு வீடியோ உள்ளே..

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான ‘மாமன்னன்’ டிரைலர் எப்போது..? – அட்டகாசமான அப்டேடுடன் வைரலாகும் Glimpse உள்ளே..
சினிமா

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான ‘மாமன்னன்’ டிரைலர் எப்போது..? – அட்டகாசமான அப்டேடுடன் வைரலாகும் Glimpse உள்ளே..

LCU - வில் இணைந்த தளபதி விஜயின் ‘லியோ’.. - கைதி பட நடிகர் கொடுத்த அப்டேட்.. வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

LCU - வில் இணைந்த தளபதி விஜயின் ‘லியோ’.. - கைதி பட நடிகர் கொடுத்த அப்டேட்.. வைரலாகும் பதிவு உள்ளே..