தரமணி - ராக்கி - ஜெயிலர் வரிசையில் வசந்த் ரவி நடிக்கும் புதிய சைக்கலாஜிக்கல் ஹாரர் படம்! விவரம் உள்ளே

வசந்த் ரவி நடிக்கும் சைக்கலாஜிக்கல் ஹாரர் படமான அஸ்வின்ஸ்,Vasanth ravi in psychological horror thriller asvins movie | Galatta

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவரான நடிகர் வசந்த் ரவி இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த தரமணி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் வசந்த் ரவி தரமணி படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார். இதனை அடுத்து தற்போது நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தை இயக்கி வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் முதல் திரைப்படமாக வெளிவந்த ராக்கி திரைப்படத்தில் ராக்கி கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய வசந்த் ரவி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தார். தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்துவரும் நடிகர் வசந்த் ரவி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இயக்குனர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் வெப்பன் திரைப்படத்தில் வசந்த் ரவி நடிக்கிறார். இப்படத்தில் சத்யராஜ், வசந்த் ரவி மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தனது அடுத்த திரைப்படமாக வித்தியாசமான சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் படத்தில் வசந்த் ரவி நடிக்கிறார்.

தனது குறும்படங்களால் பிரபலமடைந்த இயக்குனர் தருண் தேஜா தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் அஸ்வின்ஸ் என்னும் சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் திரைப்படத்தில் வசந்த் ரவி கதாநாயகராக நடிக்கிறார். இப்படத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன் அவர்களின் மகள் சரஸ்வதி மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் விமலா ராமன்,  முரளிதரன், சிம்ரன் பரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் பி வி எஸ் என் பிரசாத் உடன் பிரவீன் டேனியல் இணைந்து தயாரிக்க, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் சார்பில் பப்பிநீடு வழங்கும் அஸ்வின்ஸ் திரைப்படத்திற்கு எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய, விஜய் சித்தார்த் இசையமைக்கிறார். இருள் உலகத்திலிருந்து கொடிய தீமைகளை இந்த உலகிற்கு கட்டவிழ்த்து விடும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சாபத்திற்கு பலியாகும் யூட்யூபர்கள் குழுவை மையப்படுத்திய கதைக்களமாக தயாராக இருக்கும் அஸ்வின்ஸ் திரைப்படத்தை ஏற்கனவே 20 நிமிட பைலட் திரைப்படமாக இயக்குனர் தருண் தேஜா இயக்கியுள்ளார். 20 நிமிட படமாகவே ரசிகர்களின் ஆர்வத்தை வெகுவாக ஈர்த்த இந்த அஸ்வின்ஸ் திரைப்படம் விரைவில் நிறைவடைந்து ரசிகர்களுக்கு வித்தியாசமான விருந்தாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் வசந்த் ரவியின் அஸ்வின்ஸ் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…

Happy to launch the first look poster of @iamvasanthravi's next film titled #ASVINS produced by @SVCCofficial & directed by @taruntejafilm.

Best wishes to the entire team @BvsnP @praveen2000 @Vimraman @GA_StudiosOffl @immuralidaran @Sarasmenon @udhaya_deep pic.twitter.com/XAcKrhffVt

— Anirudh Ravichander (@anirudhofficial) March 9, 2023

பிரம்மாண்டமாக தயாராகும் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்… சர்ப்ரைஸாக வந்த புது ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ!
சினிமா

பிரம்மாண்டமாக தயாராகும் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்… சர்ப்ரைஸாக வந்த புது ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ!

சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் சர்ப்ரைஸ் உடன் வந்த ஏ ஆர் ரஹ்மான்.. -  2nd Single வீடியோவை வெளியிட்ட படக்குழு..
சினிமா

சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் சர்ப்ரைஸ் உடன் வந்த ஏ ஆர் ரஹ்மான்.. - 2nd Single வீடியோவை வெளியிட்ட படக்குழு..

‘வணங்கான்’ படத்தை அதிரடியாக தொடங்கிய பாலா.. மிரட்டலான கெட்டப்பில் அருண் விஜய்.. - அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

‘வணங்கான்’ படத்தை அதிரடியாக தொடங்கிய பாலா.. மிரட்டலான கெட்டப்பில் அருண் விஜய்.. - அட்டகாசமான அப்டேட் இதோ..