விக்ரம் பிரபுவின் பாயும் ஒளி நீ எனக்கு பட சர்ப்ரைஸ்... கவனிக்க வைத்த விறுவிறுப்பான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!

விக்ரம் பிரபுவின் பாயும் ஒளி நீ எனக்கு பட ஸ்னீக் பீக் வீடியோ,vikram prabhu in paayum oli nee yenakku movie sneak peek video | Galatta

நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வித்தியாசமான ஆக்சன் திரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கும் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்திலிருந்து புதிய ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விக்ரம் பிரபு கும்கி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து இவன் வேற மாதிரி அரிமா நம்பி சிகரம் தொடு உள்ளிட்டப் பல படங்களில் நடித்திருக்கிறார் கடைசியாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளிவர இருக்கின்றனர். 

அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் ரமேஷ் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்து வருகிறார். பிரபல நடிகை ஈஷா ரெப்பா கதாநாயகியாக நடிக்கும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் ரெய்டு திரைப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக வர இருக்கும் ரெய்டு திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் முத்தையா அவர்கள் வசனங்களை எழுதி இருக்கிறார். விக்ரம் பிரபுவின் ரெய்டு திரைப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் 31ம் தேதி வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, மிகவும் வெளிச்சமான இடத்தில் மட்டுமே கண் பார்வை தெரியும் வெளிச்சம் குறைந்தால் பார்வை மங்கும் என்பது போல கண் பார்வை பாதிப்பு கொண்ட ஒரு நபரின் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் படமாக அடுத்து ரிலீஸாக இருக்கும் திரைப்படம் தான் பாயும் ஒளி நீ எனக்கு. இயக்குனர் கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, நடிகை வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தனஞ்ஜெயா மற்றும் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் நடித்துள்ளனர். 

இயக்குனர் கார்த்திக் அத்வைத் தயாரித்து இயக்கும் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்திற்கு பரியேறும் பெருமாள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, C.S.பிரேம் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் சாகர் பாடல்களுக்கு இசையமைக்க, இசையமைப்பாளர்கள் சன்னி மற்றும் சாகித் இணைந்து பின்னணி இசை சேர்த்துள்ளனர். SP சினிமாஸ் நிறுவனம் வெளியிடும் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படம் வருகிற ஜூன் 23ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் புதிய ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. 

வெளிச்சம் குறைவான இடத்தில் குறைவான பார்வை திறன் கொண்ட அரவிந்த் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்தில் மங்கலான வெளிச்சத்தில் அந்த அரவிந்த் கதாபாத்திரத்திற்கு எந்த மாதிரியாக பார்வைத் திறன் இருக்கும் என்பதை காட்டும் வகையில் வித்தியாசமான ஒரு அதிரடி ஆக்சன் காட்சியை ஸ்னீக் பீக் வீடியோவாக படக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதிரடியான அந்த ஸ்னீக் பீக் இதோ…
 

சினிமா

"இந்த முறை தளபதி விஜய் அண்ணாவிற்காக!"- லியோ பட "நா ரெடி" பாடலை எழுதிய விக்ரம் பட பாடலாசிரியர்! சூப்பர் மாஸ் தகவல் இதோ

“பணத்திற்காக நான் வேலை செய்வதே இல்லை!”- தான் எந்த மாதிரியான நடிகர் என விவரித்த SJசூர்யா! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

“பணத்திற்காக நான் வேலை செய்வதே இல்லை!”- தான் எந்த மாதிரியான நடிகர் என விவரித்த SJசூர்யா! ட்ரெண்டிங் வீடியோ

“அலட்சியமா விட்டதால் தான் இப்படி ஆச்சு” கண்கலங்கிய பிரபல நடிகர் பவா லக்ஷ்மணன் –  முழு வீடியோ உள்ளே..
சினிமா

“அலட்சியமா விட்டதால் தான் இப்படி ஆச்சு” கண்கலங்கிய பிரபல நடிகர் பவா லக்ஷ்மணன் – முழு வீடியோ உள்ளே..