“தமிழ்நாட்டில் அரசு பள்ளிகூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வகங்களுடன் 7 ஆயிரம் கோடியில் பள்ளிகள் நவீனப்படுத்தப்படும்” என்று, தமிழக பட்ஜெட்டில் அதிரடியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
சட்டமன்றத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி,  

- பள்ளிக் கல்வி துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

- புதிதாக 15 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் அமைக்க 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

- அறிவு சார் நகரம் உருவாக்கப்படும் என்றும்,, ஆராய்ச்சிப் பூங்கா நிறுவ ஊக்குவிக்கப்படும் என்றும், புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

- அரசுப் பள்ளிகள் தவிர, பிற பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாட நூல்கள் வழங்க 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களின் தனித்திறன் அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்படும் என்றும், இதற்காக தமிழக அரசு சார்பில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

- பள்ளிக்கல்வித்துறைக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் புதிதாக கட்டப்படும்.

- இல்லம் தேடிக் கல்வி திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இதற்கு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

- மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி திட்டத்திற்கு 162 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 17,901 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- 19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், 1,019 கோடி ரூபாய் செலவில் புதிய மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படுகிறது.

- முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கு 1,547 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

-  முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு 817 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

- காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனை மேம்பாட்டிற்கு 120 கோடி கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

- உயர்தர மனநல சேவை வழங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.