இந்திய திரை உலகின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கும் நடிகர் தனுஷ் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் திரை உலகம் வரை கலக்கி வருகிறார். முன்னதாக தமிழில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் சில தினங்களுக்கு முன்பு ரிலீசானது.

இதனை அடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் மற்றும் தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுறி இயக்கத்தில் வாத்தி (SIR) ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

மேலும் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் படத்தின் இயக்குனர்களான ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் தி க்ரே மேன் படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் தி க்ரே மேன் திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியினர் தங்களது விவாகரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இயக்குனராக தனது புதிய மியூசிக் வீடியோ பணிகளைத் தொடங்கினார். தமிழில் பயணி என்ற பெயரில் ரிலீஸ் ஆகியுள்ள இந்த மியூசிக் வீடியோ ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது. தமிழில் பாடலாசிரியர் விவேகா எழுதிய பயணி பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். 

இன்று (மார்ச் 17ஆம் தேதி) பயணி பாடலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த பயணி பாடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பயணி பாடல் லிங்கை பகிர்ந்து, “உங்களது புதிய மியூசிக் வீடியோவிற்கு வாழ்த்துக்கள் என் தோழியே” என பதிவிட்டுள்ளார். வைரலாகும் தனுஷின் அந்தப் பதிவு இதோ…