தமிழக்தின் பழம் பெருமை வாய்ந்த மிகவும் தொன்மையான கோயில்களை மறுசீரமைக்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,

- அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாயும், வெள்ள தடுப்பு பணிகளுக்காக 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியில் 100 கோடி ரூபாய் தமிழகத்தில் உள்ள புராதான கோவில்களை சீரமக்க ஒதுக்கப்பட்டு உள்ளது.

-  தர்காக்கள், தேவாலயங்களை புனரமைக்க 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- விழுப்புரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- ஆதி திராவிடர் நலத்துறைக்கு 4281 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 20, 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- சமத்துவபுர வீடுகளை சீரமைக்க 190 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,694 கிலோ மீட்டர் கால்வாய்களை தூர் வார ஒப்புதல் அளிக்கப்படுகிறது. 

- வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக 2787 கோடி ரூபாயும், பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக 7,500 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

- பாசனத்திற்கான நீரை தங்குதடை இன்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காகவும் 3,384 கோடி ரூபாய் நிதி ஒதுகீடு செய்யப்பட்டு உள்ளது.

- டெல்டா கடைமடை பகுதிகள் வரை தூர்வாரும் பணிகளுக்கு இந்த பட்ஜெட்டில் 80 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- கொற்கையில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

- வட்டியில்லா பயிர் கடன் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறைக்கு 7,338.36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது, கடந்தாண்டை காட்டிலும் 4, 296.35 கோடி ரூபாய் கூடுதலாக இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

- தமிழகத்தில் உள்ள அணைகள் புனரமைப்பு, பாதுகாப்புக்கு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- தமிழக பட்ஜெட்டில் கால்நடை பராமரிப்பு துறைக்கு 1,314 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.