தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித்குமார் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழ்கிறார். சில வாரங்களுக்கு முன்பு நடிகர் அஜித்குமார் காவல்துறை அதிகாரியாக நடித்து வெளிவந்த வலிமை திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவான வலிமை திரைப்படத்தை சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று & மேற்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய H.வினோத் இயக்கினார். வலிமை படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்பராயன் பணியாற்றினார். யுவன் ஷங்கர் ராஜா பாடல்களுக்கு இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசை சேர்த்தார்.

தொடர்ந்து அஜீத் குமாரின் அடுத்த படமாக தயாராக இருக்கும் #AK61 திரைப்படத்தையும் போனி கபூர் தயாரிப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் இந்தத் திரைப்படத்தையும் இயக்குனர் H.வினோத் இயக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் வெளிவந்துள்ளன. வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அஜித்குமாரின் புதிய கெட்டப் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இந்த லுக் அடுத்த #AK61 கெட்டப்பாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில்  தமிழ் சினிமாவில் துணை நடிகராக பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் அம்பானி ஷங்கருடன் அஜித்குமார் இணைந்திருக்கும் புதிய புகைப்படம் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் அந்த புகைப்படம் இதோ…