பல கோடி ரசிகர்களில் ஃபேவரட் ஹீரோவாகவும் தமிழ் திரையுலகின்  உச்ச நட்சத்திரமாகவும் ஜொலிக்கும் தளபதி விஜய்யின் நடிப்பில் அடுத்து ரிலீசாக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது பீஸ்ட் திரைப்படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தை இயக்குனர் நெல்சன் எழுதி இயக்கியுள்ளார். 

பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க,  செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, யோகிபாபு, அபர்ணா தாஸ், சதீஷ் கிருஷ்ணன், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் பீஸ்ட் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் பீஸ்ட் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனிடையே பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய் பாடியுள்ள ஜாலியோ ஜிம்கானா எனும் கலக்கலான பாடல் நாளை (மார்ச் 19ஆம் தேதி) ரிலீசாக உள்ளது.

முன்னதாக அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதி வெளிவந்த அரபிக் குத்து பாடல் வேற லெவல் ஹிட் அடித்துள்ளது. தளபதி விஜய்யின் செம ஸ்டைலான நடனத்தில் வெளிவந்த அரபிக் குத்து பாடல் YouTube-ல் (தற்போது 190Million) 200 மில்லியன் பார்வையாளர்கள் எனும் சாதனையை வெகு விரைவில் படைக்கவுள்ளது. 

முன்னதாக சமந்தா, அனிருத், பூஜா ஹெக்டே, ஜொனிதா காந்தி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஆவேஷ் கான் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…