தென்னிந்திய திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை மீரா ஜாஸ்மின் தமிழில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் மாதவன் நடித்து வெளிவந்து மெகா ஹிட்டான ரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தளபதி விஜய்யுடன் புதிய கீதை, அஜீத் குமாருடன் ஆஞ்சநேயா என நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஆயுத எழுத்து விஷாலின் சண்டக்கோழி உட்பட தமிழ், மலையாளம், தெலுங்கு & கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் நட்சத்திர நாயகியாக ஜொலித்த நடிகை மீரா ஜாஸ்மின் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

மலையாளத்தில் இயக்குனர் சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மகள் படத்தில் மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடிக்க ஜெயராம் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் தேவிகா சஞ்சய், இன்னொசென்ட், சீனிவாசன், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்ட்ரல் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் மகள் படத்திற்கு S.குமார் ஒளிப்பதிவு செய்ய விஷ்ணு விஜய் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரை உலகில் கம்பேக் கொடுத்துள்ள நடிகை மீரா ஜாஸ்மினின் மகள் திரைப்படத்தின் அசத்தலான டீசர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் மீரா ஜாஸ்மினின் மகள் பட டீஸர் இதோ…