தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 7 ஐபிஎஸ் அதிகாரிகள் ஐ.ஜி. பதவியிலிருந்து ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுக்குறித்த அறிவிப்பில், தென்மண்டல ஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கர்க் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய நிலையில் தென்மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா வடக்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல் ஆணையராக சந்தோஷ்குமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக ஐஜி செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் அமலாக்கப்பிரிவு  ஐ.ஜி.யாக ஏ.டி.துரைக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நிர்வாக பிரிவு ஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி S.மல்லிகா நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் பதவி உயர்வு அளிக்கப்பட்டு காவலர்கள் நலப்பிரிவு ஐஜியாக  நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊர்காவல்படை கூடுதல் கமாண்டன்டாக ஏடிஜிபி ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் காவல்துறை நடவடிக்கைகள் பிரிவு ஏடிஜிபியாக பால நாகதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், தமிழகம் முழுவதும் 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் பதவி உயர்வு அளிக்கப்பட்டு காவலர்கள் நலத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு பணியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ஆயுஷ்மணி திவாரிக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து மத்திய அரசு பணியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி மகேஸ்வர் தயாளுக்கும் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி சுமித் சரணுக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக உள்ள அபின் தினேஷ் மொடக்குக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐஜி சஞ்சய்குமார் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார். N.K.செந்தாமரைக் கண்ணன் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஜியாக உள்ள வி.வனிதா பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னையில் ரயில்வே பணியில் ஏடிஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.