வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆர்.கே நகர் தொகுதிக்கு உட்பட்ட காசிமேடு பகுதியில் இன்று ஆய்வு மேற்கொள்ள வரும் நிலையில் அவரை காணவில்லை என்ற ஆர்.கே.நகர் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பெரும் பரபரப்பை ஏற்பட்டு இருக்கிறது. 


ஓர் முக்கிய அறிவிப்பு என்ற ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில்,  வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரையும் ஆர்,.கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரையும் கொரோனாவிற்கும் காணவில்லை, புயலுக்கும் காணவில்லை, மழைக்கும் காணவில்லை என்று ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகர்,ஜெஜெ நகர், கத்திவாக்கம் நெடுஞ்சாலை, உள்ளிட்ட பகுதிகளில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது.


மேலும் அந்த போஸ்டரில் அவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் இப்படிக்கு ஆர்.கே நகர் தொகுதிக்கு உட்பட்ட அண்ணாநகர் வாக்காளர்களும், ஜெ.ஜெ.நகர் வாக்காளர்களும், எழில்நகர் வாக்காளர்களும் என்று எழுதப்பட்டு இருக்கிறது. 


டிடிவி தினகரன் தொகுதி பக்கம் செல்லாத காரணத்தால் கோபமாக இருக்கும் ஆர்.கே நகர் மக்கள்,  தற்போது எம்.பி எம்எல்ஏவை காணவில்லை என்ற போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்.