கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் வீட்டில் தனியாக இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனாவின் 2 வது அலை மிக தீவிரமாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. இதனால், திரும்பிய திசை எல்லாம் காய்ச்சல் 

மற்றும் சளி, இருமல் என்று நோய் அறிகுறிகளுடன் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில், கொரோனாவின் லேசான அறிகுறிகளுடனும் அல்லது அறிகுறிகள் இல்லாமலும் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள், அவர்களாகவே 

தங்களது வீட்டிலேயே தங்களைத் தானே தனிமைப்படுத்திக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. 

அதன் படி, 
- லேசான மற்றும் அறிகுறிகள் இல்லாத கொரோனா பாதிப்புள்ள நபர் என்று சிகிச்சையளிக்கும் மருத்துவ அதிகாரி சான்று அளிக்க வேண்டும்.
- நோயாளியை தனிமைப்படுத்துவதற்கும், குடும்ப உறுப்பினர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் போதுமான வசதிகள் வீட்டில் இருப்பது அவசியம்.
- அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் நோயாளியை பார்த்துக்கொள்ளப் பராமரிப்பாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும். 

- பராமரிப்பாளரும், பாதிப்புள்ளவரின் அனைத்து நெருங்கிய தொடர்புகளும் ஹைட்ரோகுளோரோகுயின் புரோபிலாக்சிஸை மருத்துவ அதிகாரியின் பரிந்துரைப்படி 
எடுத்துக்கொள்ளுவது அவசியம்.
- வயது முதிர்ந்தோர் மற்றும் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக நோய் போன்ற இணை நோய்கள் உள்ளவர்களிடம் இருந்து நோயாளி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
- நல்ல காற்றோட்டமுள்ள அறையில் நோயாளி தங்க வைக்கப்படுவது மிக அவசியம்.

- 3 அடுக்கு முகக்கவசத்தை எப்போதும் அணிய வேண்டும். 
- 8 மணி நேர பயன்பாட்டுக்குப் பின்னரோ அல்லது முகக்கவசத்தை அகற்ற வேண்டும்.
- நோயாளிகள் நன்றாக ஓய்வெடுத்து, உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க நிறைய திரவங்களை அடிக்கடி அருந்த வேண்டும்.

- சுவாச ஒழுங்குமுறைகளை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்.
- சொந்த உபயோகப் பொருள்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ள கூடாது.
- அறையில் இருக்கும் அடிக்கடித் தொடக்கூடிய இடங்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

- ஆக்சிமீட்டர் மூலம் ரத்த ஆக்சிஜன் அளவை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- தங்களுடைய தினசரி உடல் வெப்பத்தை சோதிப்பதன் மூலம், நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தை தாங்களே கண்காணித்து கொள்ள முடியும். 
- நோயாளியை பராமரிப்பவர் கண்டிப்பாக மூன்றடுக்கு மருத்துவ முகக்கவசத்தை அணிய வேண்டும். 

- பாதிக்கப்பட்ட நபருடன் ஒரே அறையில் இருக்கும் போது, என்95 முகக்கவசத்தை கண்டிப்பாக பராமரிப்பவர் அணிய வேண்டும்.
- முகக்கவசத்தின் முன் பகுதியை, பயன்படுத்தும் போது அதனை தொடவோ, கையாளவோ நிச்சயம் கூடாது.
- இந்த தனிமைப்படுத்தல் காலத்தில், பராமரிப்பாளர் மற்றும் மருத்துவமனை இடையே தொடர்பு இருக்க வேண்டும்.

- நோயாளியின் உடம்பில் சுரக்கும் திரவங்களுடன், குறிப்பாக வாய் மற்றும் சுவாச திரவங்களிலிருந்து, நேரடித் தொடர்பைத் தவிர்க்க வேண்டும்.
- வெளிப்பரப்புகளை சுத்தப்படுத்தும் போதும், நோயாளி பயன்படுத்திய துணிகள் அல்லது மெத்தை விரிப்பைத் துவைக்கும் போதும் மூன்றடுக்கு மருத்துவ முகக்கவசத்தையும், தூக்கி எறியக்கூடிய கையுறைகளையும் பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும்.