வாக்குறுதிகடிதம்:


அன்பான சிங்காநல்லூர் வாக்காளர் பெருமக்களே!
நான் Dr.மகேந்திரன். ஆர், துணைதலைவர், மக்கள் நீதி மய்யம். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியின், மக்கள் நீதி மய்ய வேட்பாளராக டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடுகிறேன்.


முதலாவதாக, நீங்கள் உங்கள் வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள்வாக்கு உங்கள்குரல்.


வாக்களிக்கப்போகும் ஒரு தொகுதி மக்களின் மிகமுக்கியமான அம்சம் என்னவென்றால், வாக்களிப்பதால் அந்தசமூகத்திற்கு அவசரமாக தேவைபடும்மாற்றத்தை கொண்டுவரமுடியும்.
5 ஆண்டுகளுக்குப்பிறகு, உங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது; சட்டசபையில் உங்கள் பிரதிநிதியாக ஒலிக்க வேண்டிய குரலை சரியாக தேர்ந்தெடுங்கள்!


உங்கள்  வாக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வாக்களிக்க ஒரு சிறந்த நேரம் இருக்குமானால், அது இப்போது தான்.


தகுதியற்றவர்களை வெளியேற்றி, உங்கள் வாழ்வை மேம்படுத்தக்கூடிய ஆளுமைக்கு வாக்களியுங்கள்! எனக்கு வாக்களித்தால், உங்கள் பிரதிநிதியாக வெற்றி பெற்று சிங்காநல்லூர் தொகுதியின்  மேம்பாட்டிற்காக உழைக்க முடியும். சிங்காநல்லூர் தொகுதியையும், நம் மாநிலத்தையும் வளப்படுத்தி, உங்கள் வாழ்க்கைத் தரத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று நான் உறுதியளிக்கிறேன்! 


சிங்காநல்லூரில் உங்கள் வேட்பாளர், டாக்டர் ஆர். மகேந்திரன் ஆகிய எனக்கு,  ஏப்ரல் 6 ஆம் தேதி  "டார்ச்லைட்" சின்னத்தில் வாக்களிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


உங்கள் வாக்கிற்க்கு என் வாக்குறுதிகள்:
•    அனைத்து குடிமக்களின் குரலாக, ஒரு சமத்துவமான எம்.எல்.ஏவை கொண்டுள்ள சிங்காநல்லூர்.
•    அனைவருக்கும் உயர்தர கல்வி வழங்கும் சிங்காநல்லூர்.
•    சிறந்த மருத்துவ வசதி உள்ள சிங்காநல்லூர்.
•    பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு சிங்காநல்லூர்.
•    உலகத்தரத்துக்கு ஈடான சாலை போக்குவரத்துக்கு வசதிகள், ரயில் மற்றும் விமான போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்.
•    அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் சிங்காநல்லூர்.
•    அனைத்து குடிமக்களுக்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் சிங்காநல்லூர்.
•    மாசற்ற, பசுமைநிறைந்த, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான சிங்காநல்லூர்.
•    முழுவேலை வாய்ப்பை பெற்ற சிங்காநல்லூர்.

சிங்காநல்லூரை தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற தொகுதிகளில் ஒரு உதாரணமாக மாற்ற வாக்களியுங்கள்.

சிங்காநல்லூரை சீரமைக்க, எனக்கு வாக்களியுங்கள்!

தங்கள் உண்மையுள்ள,
டாக்டர். ஆர்.மகேந்திரன்,
மக்கள் நீதி மய்யம்
கட்சி சின்னம் - டார்ச்லைட்

mahendaran.Dr

Dr.Mahendaran

mahendaran-mnm