“செருப்பே போடாத எம்எல்ஏ ஒருவரின் பேரன், தனது டூ விலரில் நம்பருக்கு பதிலாக “Grandson of MLA” என்று, பதிவு செய்து, பந்தாவாக ஊர் சுற்றி வருவது, பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில், அதவும் நாகர்கோவிலில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, நாகர்கோவில் எம்.எல்.ஏ.வான காந்தி, தனது கொள்கைக்காக திருமணமே செய்து கொள்ளாமல், பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். 

இந்த சூழலில் தான், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த அம்ரிஷ் என்ற இளைஞர், தான் வைத்திருக்கும் விலை உயர்ந்த பைக்கில், அந்த பைக்கின் நம்பர் ப்ளேட்டில், நம்பருக்கு பதிலாக “கிராண்ட் சன் ஆப் நாகர்கோவில் எம்.எல்.ஏ” என்ற வாசகத்தை எழுதி வைத்திருக்கிறார்.

தற்போது, இது தொடர்பான போட்டோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

ஒரு டூ விலரில் நம்பர் ப்ளேட்டில் அந்த வண்டியின் நம்பர் இருக்க வேண்டிய ஒரு இடத்தில், “தனது அதிகாரத்தைக் காட்டும் வகையில், ஒரு எம்.எல்.ஏவின் உறவினர்” என்று, அந்த இளைஞர் அம்ரிஷ் எழுதி வைத்திருப்பது தான், அந்த மாவட்டத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. 

ஆனால், நாகர்கோவில் எம்.எல்.ஏ.வான காந்தி, திருமணம் கூட செய்யாமல் பொது வாழ்க்கைக்காக தன்னை அர்பணித்து வாழ்ந்து வரும் நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த அம்ரிஷ் என்ற இளைஞன், எம்.எல்.ஏ. காந்தியை “தனது தாத்தா” என்று கூறி, அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறாரே என்று விசாரிக்கையில், “நாகர்கோவில் எம்.எல்.ஏ வாக இருக்கும் எம்.ஆர்.காந்தியின் உதவியாளராக உள்ள கண்ணனின் மகன் தான் அம்ரிஸ் என்பது தெரிய வந்திருக்கிறது.

அதாவது, “எம்.ஆர்.காந்தி, எம்.எல்.ஏ ஆனதும் அவரது டிரைவராக இருந்த கண்ணன், காந்தியின் உதவியாளராக பதவி உயர்வு பெற்றார். ஆனால், கண்ணனுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் அம்ரிஸ் என்பவர், முகநூல் பக்கத்தில் பதிவிட்ட போட்டோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனால், “நம்பர் பிளேட்டில் வண்டியின் எண்ணிற்கு பதிலா 'கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்.எல்.எம்.ஆர்.காந்தி' என்று, எழுதி இருசக்கர வாகனத்தை சாலையில் ஓட்டுவது, விதிகளுக்கு புறம்பானது” என்று, பலரும் சமூக வலைதளத்தில் எதிர் கருத்து கூறி வருகின்றனர்.

அதாவது, “பாஜக மூத்த தலைவரான எம்.ஆர்.காந்தி, 6 முறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு, இந்த முறை தான் சட்டசபைக்குள் சென்றிருக்கிறார்.

அவர், காலில் செருப்புகூட போடாமல் கதர் வேட்டி, ஜிப்பா அணிந்து நிலையில் மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறார் என்றும், கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட ஒரு மனிதரின் பெயரைப் பயன்படுத்தி, “நான் அதிகார வர்கத்தோடு தொடர்புடையவர்” என்று, தெரிவிக்கும் வகையில் அம்ரிஷ் நடந்துகொண்டு உள்ளார் என்கிற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது. 

மேலும், அந்த வண்டியில், வழக்கறிஞர் ஸ்டிக்கரும் ஒன்றையும் அவர் ஒட்டி இருக்கிறார். 

இதனையடுத்து, வழக்கறிஞர் படித்துவிட்டு சட்டத்தையே மதிக்காமல், இருப்பதாகவும் அம்ரீஷை நெட்டிசன்கள் இணையத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். இதனால், இந்த விவகாரம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.