திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அருகே உள்ள தாடுர் கிராமத்தைச்  சேர்ந்த அன்புராஜ் மகள் ராசுக்குட்டி(25), இவர்,தன் உறவினர் பெண்ணான கீர்த்தனாவை காதலித்துவந்துள்ளார்.

ராசுக்குட்டிக்கு, கீர்த்தனா தங்கை முறை என்பதால் இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளனர்.ஆகவே, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராசுக்குட்டியும்,கீர்த்தனாவும் வெளியூர் சென்று பதிவு திருமணம் செய்துள்ளனர்.

எனவே, இரு வீட்டாரும் ராசுக்குட்டியையும்,கீர்த்தனாவையும் பிரித்துள்ளனர். இது தொடர்பாக ராசுக்குட்டி திருத்தணி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகார் மீதான விசாரணையில், கீர்த்தனா தரப்பினர் ஆஜராகாமல் வந்துள்ளனர்.

ஆகவே, மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி கடந்த மாதம் 27-ம் தேதி திவள்ளூர் எஸ்.பி அலுவலகத்துக்கு மனு குடுக்க சென்ற ராசுக்குட்டி வீடு திரும்பவில்லை.

thiruthani

இந்தநிலையில் பெரியபாளையம் அருகே செங்காத்தா குளம் பகுதியில் ராசுக்குட்டி காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக திருத்தணி போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த 27-ம் தேதி திருவள்ளூருக்கு வந்த ராசுக்குட்டியை மர்ம நபர்கள் காரில் கடத்தி கொலை செய்து,செங்காத்தா குளம் பகுதியில் வீசியுள்ளது தெரியவந்தது.

ஆகவே, ராசுக்குட்டி காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக பதிவு செய்துள்ள திருத்தணி போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.