கள்ளக் காதல் விபரீதம் ஆன நிலையில், 3 மாத குழந்தையை பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொன்று விட்டு, தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இருக்கும் புது வளவு பகுதியை சேர்ந்த சரத்குமார், அந்த பகுதியில் பல்வேறு பணிகளையும் செய்யும் தொழிலாளியாக இருந்து வந்தார். 

சரத்குமாருக்கு, திருமணம் ஆன நிலையில் 23 வயதில் பிரியாங்கா என்ற மனைவி உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்த  இந்த தம்பதிக்கு 6 வயதில் ஹிருத்திக் குமார் என்ற மகனும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர். 

இப்படியாக, இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், சங்ககிரியில் செயல்பட்டு வரும் கிரானைட் நிறுவன தொழிலாளி பார்த்திபன் என்பவருடன், சரத்குமார் மனைவி பிரியாங்காவிற்கு கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இப்படியே இவர்களது உல்லாச வாழ்க்கை தொடர்ந்து நிலையில், ஒரு கட்டத்தில் கணவன் சரத்குமாரின் உறிவனர்ளுக்கு இந்த கள்ளக் காதல் விசயம் தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பிரியாங்காவை அழைத்து கண்டித்து, கள்ளக் காதல் உறவை கைவிடும் படியும் எச்சரித்து உள்ளனர். ஆனால்,  இதனை ஏற்க மறுத்துவிட்டு, அவர்கள் இருவரம் கள்ளக் காதல் உறவை தொடர்ந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து, இந்த தகவல் கணவன் சரத்குமாருக்கு தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சரத்குமார், இது பற்றி மனைவி பிரியாங்காவின்  தந்தை தங்கவேல், அண்ணன் நந்தகுமார் ஆகியோரிடம் கூறி, அவர்களது உதவியுடன் மனைவியின் கள்ளக் காதலன் பார்த்திபனை, 3 பேருமாக சேர்ந்து திட்டம் போட்டு கொலை செய்துள்ளனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலை செய்த 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, கணவன் மற்றும் தந்தை உட்பட தனது உறவினர்கள் சிறைக்கு சென்றதால், வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்த மனைவி பிரியாங்கா, சாப்பிட்டிற்கே வழியின்றி வறுமையில் வாடியதாக தெரிகிறது.

ஒரு கட்டத்திற்கு மேல் வறுமை தலை விரித்தாடிய நிலையில், நேற்றைய தினம் குழந்தைகள் இருவரையும் கழுத்தை நெரித்து விட்டு, பிரியாங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

அதன் தொடர்ச்சியாக, அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே வந்து பார்த்த போது, குழந்தைகள் இருவரும் மயங்கி கிடந்த உள்ளனர். இதனைப் பார்த்து கடும்   அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் குழந்தைகளை உடனடியாக மீட்டு, அங்குள்ள சங்ககிரி அரசு மருதுவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை, பலனின்றி 3 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

சிறுவன் ஹிருத்திக் குமார் மட்டும் உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அந்த சிறுவனுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார், குழந்தை மற்றும் பிரியங்காவின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது குறித்து வழக்குப் பதிவுசெய்து போலீசார் தீவிரமாக விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.