“மோடியை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார்” என்று, இசையமைப்பாளர் இளையராஜா பேசியது, சர்ச்சைக்குறிய வகையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, இந்தியாவின் பெரும்பாலன மாநிலங்களில் ஆட்சி அமைத்து வருகிறது. இதனால், முன்பை காட்டிலும், வட மாநிலங்களில் பாஜக பலம் பொருந்திய கட்சியாக மாறிக்கொண்டு இருக்கிறது. 

என்றாலும், பாஜக கடந்த முறை ஆட்சிக்கு வந்தபோது எழுந்த மோடி அலையானது, இந்த முறை சற்று குறைந்து, வெற்றி என்ற அளவிலேயே அது தொடர்ந்து நீடித்து வருகிறது.

எனினும், தென் மாநிலங்களில் கர்நாடகாவைத் தரவி, மற்ற மாநிலங்களில் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. 

குறிப்பாக, தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிரான நிலைபாடே அதிக அளவில் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் பொறுத்தவரையில், பெரும்பாலன வகையில் திராவிட கட்சிகளே ஆட்சியின் அதிகாரத்தில் இருந்து வருகின்றன.

இப்படியான சூழலுக்கு மத்தியில் தான், “பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு, அம்பேத்கரே பெருமைப்படுவார்” என்று, முன்னதாக பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்திருக்கிறார்.

அதாவது, புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் “மோடியும் - அம்பேத்கரும்” என்னும் தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டது.

இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுரை எழுதி இருந்தார். 

அதன்படி, அந்த புகத்தில் முன்னுரையில் எழுதியிருந்த இளையராஜா, “அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல, அவரது கருத்தையும், சிந்தனைகளையும் செயல்படுத்துபவர்களையும் நாம் நிச்சயம் ஊக்கப்படுத்த வேண்டும்” என்று, குறிப்பிட்டிருந்தார். 

குறிப்பாக, “நாட்டின் வளர்ச்சி, தொழில் துறை, சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவற்றுக்காக மோடி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அம்பேத்கரின் கருத்தும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய எத்தனிக்கிறது” என்றும், இளையராஜா தனது முன்னுரையில் எழுதி உள்ளார்.

அத்துடன், “பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டம், பல்வேறு சாதனைகளை படைத்து உள்ளது என்றும், நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன என்றும்,  உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன” என்றும், அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், “சமூக நீதியை பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி இருக்கிறார் என்றும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்து சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்கு சட்ட ரீதியிலான பாதுகாப்பை அவர் உறுதி செய்து உள்ளார் என்றும், வீடுகள், கழிப்பிடங்களை ஏழை மக்களுக்காக மோடியின் ஆட்சியில் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன என்றும், இதனால் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைந்து உள்ளது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

முக்கியமாக, “முத்தலாக் தடை சட்டத்தின் மூலமாக இஸ்லாம் பெண்களின் வாழ்வில் பெரிய அளவிலான மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார் என்றும், அதே போல் 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டமும், பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை என்றும், இது போன்ற மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார்” என்றும், இளையராஜா கூறியுள்ளார்.

மிக முக்கியமாக, “மோடிக்கும் - அம்பேத்கருக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கின்றன என்றும், அவர்கள் இருவருமே ஏழ்மையையும் ஒடுக்கு முறையையும் அனுபவித்தவர்கள் என்றும், அதை ஒழிக்க பாடுபட்டவர்கள் என்றும், இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்றும், இப்படி இருவரும் ஒன்றுபடுவதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டுகிறது” என்றும், இளையராஜா கூறியுள்ளார்.

“பிரதமர் மோடியால் கட்டமைக்கப்பட்டு வரும் தற்சார்பு இந்தியா என்பது விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் மகத்தான அஞ்சலி என்றும், விடுதலை போராட்ட வீரர்கள் கனவின்படி புதிய இந்தியா எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது” என்றும், இளையராஜா புகழ்ந்து எழுதி உள்ளார்.

குறிப்பாக, “நமது மண்ணின் சிறந்த மைந்தனின் பெருமையை வெளிக்காட்டுகிறது என்றும், இதனை இளைய தலைமுறையினருக்கு நான் பரிந்துரைக்கிறேன்” என்றும், அந்த புத்தகத்தில் இளையராஜா புகழ்ந்து எழுதி உள்ளார்.