பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக திகழும் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் அமைந்துள்ள நடிகை ஆலியா பட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பதிவிட்டு, 

“ஐந்து ஆண்டுகளாக நாங்கள் காதலித்த சமயத்தில் எங்களது வீட்டின் ஃபேவரட் இடமான பால்கனியில் எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் சூழ இன்று திருமணம் செய்து கொண்டோம்” 

என தெரிவித்துள்ளார்.

மேலும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் திருமண வரவேற்பு நாளை மிக பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய திரைத் துறையைச் சார்ந்த முன்னணி நட்சத்திர பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திர ஜோடியான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் திருமணத்திற்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் இந்திய திரை உலக ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக ஆலியா பட் வெளியிட்ட திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…