சென்னை போரூரில் இ-பை ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில மாதங்களாகவே இ-பைக் பேட்டரி வெடித்து உயிர் சேதம் முதல் பொருள் சேதம் வரையில் விபத்து ஏற்பட்டது. இதில் அப்பாவும் பொண்ணும் இறந்தனர். மேலும் இ-பைக்யை  ஓட்டி சென்றாலோ அல்லது நிறுத்திவைக்கப்பட்டாலும் பேட்டரியில் இருந்து கரும் புகை வருகிறது மேலும் சிறிது நேரத்தில் வெடித்து விடுகிறது. இதனால் இ-பை வாங்கிய மக்கள் அச்சத்துடனே அந்த வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர்.

இந்நிலையில் சென்னை போரூரில், குன்றத்தூர் பிரதான சாலையில் ராஜாராம் என்பவர் இ-பைக் ஷோரூம் நடத்தி வருகிறார். போரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த ஷோரூமில் இ-பைக்குகள் வாங்கியுள்ளனர். இந்நிலையில் பைக் வாங்கியவர்கள் சர்வீஸ் செய்வதற்காகவும் பைக்குகளை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்த ஷோரூமில் சார்ஜ் போரப்பட்டிருந்த பைக்கின் பேட்டரி வெடித்து தீப்பிடித்துள்ளது. இதைப் பார்த்த ஊழியர்கள் அலறியடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியே ஓடினர் ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவியது. இதில் 5 புதிய இ-பைக்குகள், மற்றும் சர்வீஸ் செய்வதற்காக வந்த 12 பைக்குகள் என மொத்தம் 17 பைக்குகள் எரிந்து சேதமானது. மேலும் ஷோரூமிலிருந்த பொருட்களும் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

மேலும் இச்சமபவம் குறித்து தகவல் அறிந்த விருகம்பாக்கம் தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. இது குறித்து போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பேட்டரிகளால் இயங்கும் இ-பைக்குகள் சமீப காலமாக தீப்பிடித்து எரிந்து வரும் சம்பவங்கள் வாடிக்கையாளர்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.