தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து வரிசையாக அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஷால் அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். விஷாலுடன் இணைந்து நடிகர் S.J.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால் முன்னதாக இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்து வரும் திரைப்படம் லத்தி. இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர உள்ள லத்தி படத்தில் சுனைனா & பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைந்து லத்தி திரைப்படத்தை தயாரிக்கின்றனர். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் லத்தி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இந்நிலையில் பீட்டர் ஹெயின் ஸ்டண்ட் இயக்கத்தில் லத்தி திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக விஷால் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  மேலும் புதிய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். வைரலாகும் அந்த வீடியோ இதோ…