தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசனுக்கு இணையாக 80களில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் மோகன். ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாக வலம் வந்த நடிகர் மோகன் நட்த்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

குறிப்பாக மோகன் திரைப்படங்களில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மக்களின் இதயங்களை கொள்ளை அடித்தது. இன்றும் பலரது மியூசிக் ஹிட் லிஸ்டில் மோகன் ஹிட்ஸ், மோகன் மெலடிஸ் என நாம் பார்க்க முடியும். ஒரு கட்டத்தில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த மோகன் கடந்த சில ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து விலகியிருந்தார்.

இதனிடையே மீண்டும் தமிழ் சினிமாவில் மாஸான ரீ-என்ட்ரி கொடுத்துள்ள மோகன் இயக்குனர் விஜய் ஸ்ரீ.G இயக்கத்தில் ஹரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். மோகனுடன் இணைந்து நடிகை குஷ்பூ கதாநாயகியாக நடிக்க யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹரா படத்தை கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர். 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹரா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூர் மற்றும் ஊட்டி பகுதிகளில் தொடங்கப்பட்டு தொடர்ந்து  நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் மோகனின் ஹரா படத்தின் டைட்டில் டீசர் வீடியோ தற்போது வெளியானது. அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள அசத்தலான ஹரா படத்தின் டைட்டில் டீசர் இதோ…