அடுத்தடுத்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக அதிரடி-ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியுள்ள திரைப்படம் யானை. இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள யானை திரைப்படம் வருகிற ஜூன் 17-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

முன்னதாக அருண் விஜய் நடிப்பில் அக்னிச்சிறகுகள், பாக்சர் மற்றும் சினம் உள்ளிட்ட திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் ரிலீஸாக உள்ளன. மேலும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படம் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், மீண்டும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் புதிய வெப்சீரிஸில் அருண்விஜய் நடித்து வருகிறார். 

இதனிடையே நடிகர் அருண்விஜய், அவரது மகன் அர்னவ் மற்றும் அவரது தந்தை விஜயகுமார் மூவரும் இணைந்து நடித்துள்ள ஓ மை டாக் திரைப்படம் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகிறது. மேலும் ஓ மை டாக் படத்தில் நடிகை மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, நடிகர் வினய் வில்லனாக நடித்துள்ளார்.
 
இயக்குனர் சரோ சரவணன் எழுதி இயக்கியுள்ள ஓ மை டாக் திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. கோபிநாத் ஒளிப்பதிவில் நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ள ஓ மை டாக் திரைப்படம் இந்நிலையில் ஓ மை டாக் திரைப்படத்தின் முதல் பாடலாக It's My Kinda day பாடல் தற்போது வெளியானது. அந்த பாடல் இதோ…