பேரறிவாளன் வழக்கில் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் கவர்னர் என உச்சநீதி மன்றம் அதிரடியாக தெரிவித்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  மூன்று  ஆண்டுகளாகியும்,  பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்காதது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. அத்துடன் ஆளுநருக்காக மத்திய அரசு வாதாடுவது ஏன்??. 70 ஆண்டுகளாக ஆளுநரின் தண்டனை குறைப்பு நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானதா என அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்துள்ளது.  

ராஜிவ் காந்தி தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் கடந்த 2020 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த விசாரணையின்போதே பேறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு இன்றைக்குள் மே 10 முடிவெடுக்காவிட்டால் அரசமைப்பின்படி உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கும் எனவும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும்  விசாரணைக்கு வந்தது.  அப்போது மத்திய அரசின் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி மத்திய அரசு வாதம் செய்தது.   அதில்,  பேராறிவாளனின் வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பின் கீழ் வருவதாகவும், ஆகையால் இந்த விசாரணையில்  மாநில அரசு முடிவெடுக்க முடியாது என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. பேரறிவாளன் வழக்கில் விசாரணை தொடங்கியதும் கவர்னர் எடுத்த முடிவு தொடர்பான ஆவணத்தின் நகலை மத்திய அரசு  சமர்பித்தது. தொடர்ந்து, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். 

மேலும் தண்டனை மீது கருணை காட்டும் முடிவை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே சென்றுவிட்டால் கவர்னருக்கான சிறப்பு அதிகாரம் ‘161’ என்ற பிரிவு எதற்கு? அது அரசியலமைப்பில் தேவையில்லையா? என பல கேள்விகளை சரமாரி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு, சில சந்தர்ப்பங்களில் கவர்னர் சுயமாகவும் செயல்பட முடியும். மாநில அமைச்சரவையின் பரிந்துரைகள் ஏற்கத்தக்கதாக இல்லாமல் இருந்தால், கவர்னர்  சுயமாக முடிவெடுக்க முடியும். அமைச்சரவையின் முடிவு சட்டவிதிகளை மீறி இருக்கும் பட்சத்தில் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பும் அதிகாரம் கவர்னருக்கு உண்டு  என மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதாடினார்.

அதனைத்தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கவர்னர் முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில்,  ஜனாதிபதியை தலையிட வைப்பது ஏன் அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக கவர்னர் செயல்பட்டிருப்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணானது. அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்ததோடு, முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு அனுப்பியது அரசியல் சாசன பிழையாகும்.

மேலும் இதன் தொடர்பாக கவர்னருக்கு முடிவு எடுக்க அதிகாரம் இல்லை, ஒப்புதல் அளிக்கவே அதிகாரம் உள்ளது; கவர்னர் தன் கடமையை செய்ய தவறியதோடு தேவை இல்லாமல் இதில் ஜனாதிபதியையும் இழுத்து விட்டிருக்கிறார். இந்திய தண்டனை சட்டம் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது இல்லை. அவற்றில் சில மாற்றங்களை மட்டுமே நாடாளுமன்றம் மேற்கொண்டுள்ளது. சில திருத்தங்களை மேற்கொண்டதாலேயே, மாநிலங்கள் மீது மத்திய அரசு அதிகாரம் செலுத்த முடியாது’  என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இறுதியில், பேரறிவாளன் வழக்கு மீதான விசாரணையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.