தமிழ் திரை உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் இருவரும் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
 
இதனைத்தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியினர் தலைவராக பாடுபட்ட பிஸ்ரா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய பயோபிக் திரைப்படமாக ஹிந்தியில் தயாராகவுள்ள படத்தையும் இயக்கவுள்ளார். 

மேலும் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளராகவும் நல்ல திரைப்படங்களை கொடுத்துவரும் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அடுத்ததாக ஊர்வசி மற்றும் தினேஷ் இணைந்து நடித்துள்ள J.பேபி திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அந்த வரிசையில் முன்னதாக நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்து பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட திரைப்படம் சேத்துமான்.

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை, வசனத்தில் இயக்குனர் தமிழின் திரைக்கதை, இயக்கத்தில் உருவாகியிருக்கும் சேத்துமான் திரைப்படத்தில் மாணிக்கம், மாஸ்டர் அஸ்வின், சுருளி, பிரசன்னா, குமார், சாவித்திரி, கனிகா, அண்ணாமலை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரதீப் காளி ராஜா ஒளிப்பதிவில் பிந்து மாலினி இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் சேத்துமான் திரைப்படம் வருகிற மே 27ம் தேதி Sony Liv தளத்தில் ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் சேத்துமான் திரைப்படத்தின் புதிய டீசர் வெளியானது. அந்த டீசர் இதோ…