தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ராம்சரண் முன்னதாக இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த RRR திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று மெகா ஹிட் பிளாக் பஸ்டரானதோடு 1100கோடி எனும் இமாலய வசூல் சாதனை படைத்தது.

இதனையடுத்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் #RC15 திரைப்படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ராம்சரண் , மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஆச்சார்யா. 

கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸான ஆச்சார்யா படத்தில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்க, பவண், சோனு சூட், ஜிஷூ செங்குப்தா, சௌரவ் லோகேஷ், கிஷோர், தணிக்கெல்லா பரணி, சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

கோனிடெலா புரொடக்ஷன் கம்பெனி மற்றும் மேட்னி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ஆச்சாரியா திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவில் மணிசர்மா இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஆச்சார்யா படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியானது. அந்த மேக்கிங் வீடியோ வீடியோ இதோ…