தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராகவும் பிரபல நடிகராகவும் திகழ்பவர் உதயநிதி ஸ்டாலின். முன்னதாக இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே, இயக்குனர் K.S.அதியமான் இயக்கத்தில் ஏஞ்சல் மற்றும் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கும் புதிய திரைப்படம் என உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் நடிகர், இயக்குனர் & பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் , கனா படத்திற்கு பிறகு இயக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் உதயநிதி.  நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வருகிற மே 20-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில்,பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகியுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க, ஆரி அர்ஜுனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தோமஸ் இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திலிருந்து செவக்காட்டு சீமையெல்லாம் எனும் பாடல் வெளியானது. அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.