சாலையில் செல்லும் பெண்கள் சுமார் 500 பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞன் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளான்.

சென்னை சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான சரண் என்ற இளைஞர், அந்த பகுதியில் கலெக்சன் எஜெண்டாக பணியாற்றி வருகிறார்.

இப்படியான சூழ்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், அந்த பகுதியில் பணிக்கு சென்றுவிட்டு, தனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது, அந்த பகுதியில் அவர் ரோட்டில் சென்றுகொண்டிருந்த போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், திடீரென்று அந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், பதறித் துடித்து உள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்து அந்த இளைஞன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று உள்ளார். 

இதனால், கடும் பீதியும் பதற்றமும் அடைந்த இளம் பெண், சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அந்த சிசிடிவி காட்சியில், பதிவான இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை செய்தனர். அதில், சென்னை பூந்தமல்லி அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த 21 வயதான சரண் என்ற இளைஞர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்த இளைஞனைப் பிடித்து போலீசார் தங்களது பாணியில் விசாரித்தனர்.

இது தொடர்பாக அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும்படியான அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. 

அதாவது, “21 வயதான சரண், பூந்தமல்லியில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். பணம் வசூலிப்பதற்காகச் சரண் சென்னையில் பல இடங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கம். 

அப்படி சாலையில் தனிமையில் செல்லும் பெண்களைக் குறி வைக்கும் சரண், பெண்களை வழி மறித்து பாலியல் சீண்டல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்திருப்பதும்” தெரிய வந்தது.

மேலும், “இப்படியான பாலியல் சீண்டலில் பாதிக்கப்படும் பெண்கள், நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லவும், இது குறித்து புகார் அளிக்கவும் தயங்குவதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வந்த சரண், பெண்களிடம் இப்படி தொடர்ச்சியாக அத்து மீறி தொடர்ந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறான்.

இப்படியாக, கடந்த 2 வருடங்களில் அவன் பல பெண்களை பாலியல் சீண்டல் செய்து வந்தது தெரிய வந்தது. அதன் படி கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், தினமும் 2 பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும்” தன்னுடைய வாக்குமூலத்தில் சரண் கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு, கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், எதுவும் பேச முடியாமல் திகைத்துப் போய் நின்று உள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சரண் மீது, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.